பணமுமின்றி விலையுமின்றி 59-0802 1. இந்தக் காலையில் மீண்டுமாக கூடாரத்தில் இருப்பதென்பது நிச்சயமாகவே ஒரு சிலாக்கியமாகவுள்ளது. நான் அப்படியே வியப்படைந்து கொண்டிருக்கிறேன்…பின்னால் உள்ள அநேகரால் கேட்கமுடியவில்லையென்று சகோதரன் நெவில் கூறினார். அங்கே பின்னால் உள்ளவர்களே இப்பொழுது உங்களால் நான் பேசுவதை மிக நன்றாக கேட்க முடிகிறதா? சரியாக உள்ளதா? சரி, நான்—நான் சிறு உருவங்கொண்டவனாயிருக்கிறேன், எனவே நான் பேசுவதை ஜனங்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் கேட்டறிந்து கொள்ளும்படி நான் அதிக சத்தமிட வேண்டியதாயுள்ளது. 2 எனவே நான் பொதுப்பணித்துறை நிர்வாகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு சமயம் நடந்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் படிகளில்…மேலேறி சென்று கொண்டிருந்தேன். நான் வழக்கமாகவே பெருந்தலைப்பகுதிகளைக் கொண்ட ஆணிகளைப் புதை மிதியடியில் வைத்து தைத்து உருவாக்கப்படும் பெரிய காலணிகளையே அணிந்து கொண்டு உயர்வான மின் இணைப்பு பாதைகளிலிருந்து நடந்து வருவது உண்டு. அப்பொழுது நான் படிகளில் மேலேறி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் திருமதி ஈலாட் (Ehalt) என்பவர் மின் தொடர் பிணைப்புப்பலகையினிடத்தில் இருந்தார். அங்குள்ள திரு.ஜின்ந்தர் அவர்களே, நீங்கள் அவளை மிக நன்றாக அடையாளங்கண்டு கொள்வீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். ஆகவே எடித், “பில்லி, நான் எப்போதும் கண்டுள்ளவர்களில் சிறிய உருவங்கொண்ட நபராயிருந்தும், நீர் மிக அதிகமான சத்தத்தை ஏற்படுத்துகிறீரே” என்றாள். இந்தப் பெருந்தலைப் பகுதிகளைக் கொண்ட ஆணிகளை புதைமிதியடியில் கொண்டுள்ள காலணிகளை அணிந்து சத்தமாக ஒலியெழுப்பிக் கொண்டே படிகளில் நடந்து மேலேறிச் செல்வேன். 3 நான், “பாருங்கள், எடிட், நான் மிகச் சிறு உருவங்கொண்டவனாயிருக்கிறேன். எனவே நான் சுற்றிலும் ரோந்து வந்து கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாரும் அறிந்து கொள்ளும்படிக்கே நான் அதிக சத்தத்தை உண்டுபண்ண வேண்டியதாயிருக்கிறது” என்றேன். 4 நான் சற்று முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள உள்ளே சென்றேன். அப்பொழுது சகோதரன் நெவில் அவர்கள் என்னுடைய நல்ல நண்பர் சகோதரன் ராய் ராபர்ஸன் அவர்கள் சுகவீனமாயிருக்கின்ற காரணத்தின் நிமித்தமாய் இக்காலை ஆராதனைக்கு வர இயலாமல் தொலைவில் இருக்கிறார். அவருடைய…அவர் ஒரு பல்லைப் பதித்து வைத்திருந்தார். எனவே அது நோய்நுண்மங்களை பரப்பி நச்சுப்படுத்தி, அவருக்கு காய்ச்சலை ஏற்படுத்த காரணமாயிற்று. எனவே அவர் அதை பிடுங்கி எடுக்க வேண்டியதாயுள்ளது. அதை தாமதமின்றி செய்ய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ராய் அவர்கள் நமக்கு இங்கு ஒரு தகப்பனைப்போல இருந்து வருகிறார், எனவே நாம் அவரை நேசிக்கிறோம். ஆகையால் நான், “சகோதரன் ராய் அவர்களே, இப்பொழுது இன்னும் ஒரு சில நிமிடங்களில் நான் ஆராதனைக்காக உள்ளே செல்லப்போகிறேன்” என்றேன். மேலும் நான், “உங்களுக்காக இக்காலையில் நாங்கள் யாவரும் ஜெபிக்கும்படியாக நான் சபையைக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்” என்றும், நாளை அவர் அங்கு செல்லும்போது, இது கவனமாய் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினேன். அந்தப் பல்லானது கோணலாக அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு விதமாக வளர்ந்துள்ளது. அது முறைப்படியில்லாமல் பதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அதனை வெளியே துண்டித்து, பின்னர் பிடுங்கி எடுக்க வேண்டியதாயுள்ளது. 5 சகோதரன் ராய் அவர்கள் ஓய்வு பெற்றுள்ள ஒரு படைத்துறை வீரர். நீங்கள் யாவரும் அறிந்துள்ளபடி இரண்டாம் உலகப் போரில் அவர் சின்னாபின்னமாக சுடப்பட்டிருந்தார். அது தேவனுடைய நன்மைக்கானதாய் இல்லாதிருந்திருக்குமானால், அவர் பிழைத்திருக்கவுங்கூடமாட்டார். அவர் மரித்தோர் மத்தியில் நீண்ட நேரமாக கிடத்தப்பட்டிருந்தார். கரங்களில் இங்கே சுட்டு சிதைக்கப்பட்டு, கால்களிலும் வெடித்து சிதைக்கப்பட்டு, முக்கியமான நரம்புகள் மரித்தேபோய்விட்டிருந்தன. ஆகையால் மருத்துவரோ, “அவர் எப்படியாவது பிழைத்தாலும், அவர் ஒருபோதும் ஓர் அடி கூட எடுத்து வைத்து நடக்கமாட்டார்” என்று கூறிவிட்டார். ஆனால் தேவனுடைய கிருபையினால் அவர் ஒவ்வொரு நாளும் பணி புரிகிறார். உயரே ஏறி எல்லாவற்றையுமே செய்கிறார். தேவன் அவருக்கு நல்லவராகவே இருந்து வருகிறார். ஏனென்றால் அவர் ஒரு நல்ல மனிதனாக இருக்கிறார். நாம் அவரை நேசிக்கிறோம். நாம், நாம்—நாம் எல்லோருமே…அல்ல… 6 நாம் சரியாக ஜீவிப்போமேயானால், அப்பொழுது நாம் இந்தக் தொல்லைகளிலிருந்து விடுபாடு கொண்டவர்களாயிருப்போம் என்பதை அது பொருட்படுத்தவில்லை. வெளிப்படையாகக் கூறினால், எல்லாத் தொல்லைகளுமே நம்முடைய வழியில் திருப்பப்படுகின்றன என்பதையே அது பொருட்படுத்துகிறது. “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” அதுவே அந்த மகிமையான பாகமாயுள்ளது. 7 ஆகையால் நாம் சகோதரன் ராய் அவர்களுக்காக இக்காலையில் விசேஷித்த பிராத்தனை ஏறெடுக்கும்படியாய் கேட்டுக் கொள்ளப்போகிறோம். அதே சமயத்தில் இங்குள்ள எவரேனும் ஜெபித்துக்கொள்ளப்பட வேண்டும் என்றோ, ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டுமென்றிருக்கிறீர்களா என நான் எதிர்பார்க்கிறேன். அப்படியானால் அவர்கள் தங்களுடைய கரங்களை அப்படியே உயர்த்துவார்களேயானால் நலமாயிருக்கும். சரி, அது அருமையாயுள்ளது. நீங்கள் விரும்பினால் நாம் ஜெபிக்கையில், அப்படியே சற்று நேரம் எழுப்பி நிற்போமாக. 8 கர்த்தாவே, நாங்கள் ஓய்வுநாளின் துவக்கத்தில் இன்றைக்கு வருகிறோம். இப்பொழுது சூரியனானது ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறவைகளுக்கு வெளிச்சத்தையும், ஜீவனையும் கொண்டு வரும்படியாக உலகத்தினூடாக எழும்பித் தன்னுடைய செயல்முறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆராதனையின் துவக்கத்திலே…நாங்கள் உம்முடைய சபையின் ஒரு பங்காயிருக்கிறோம், சரீரத்திற்கான, சரீரப்பிரகாரமான சுகமளித்தலுக்கென, சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தும்படியாக எங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, எங்களுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தரின் தழும்புகளால் குணமாக்கப்பட்டு, அவருடைய விருப்பங்களையும், வாஞ்சைகளையும் நிறைவேற்றும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். சூரியன் தன்னுடைய செட்டைகளை வீசும்படி எழும்பத் துவங்கினதுபோல, ஆராதனையின் துவக்கத்திலேயே பாடல்களிலும், மற்றுமுள்ளவற்றிலும் எங்களுடைய இருதயங்கள் எழுப்பப்பட துவங்க வேண்டுமென்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே நாங்கள் இக்காலையில் உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனான எங்களுடைய அருமையான, விலையேறப்பெற்ற சகோதரன் ராய் ராபர்ஸன் அவர்களை நினைவுகூருகிறோம். நீரே யுத்தகளத்தில் அவருடைய ஜீவனைக் காத்து, அவருக்கு நல்லவராக இருந்து வருகிறீர் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இன்றைக்கு அவர் வேதனையில் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் அவரால் சபைக்கு வருகைத் தரமுடியவில்லை. 9 கர்த்தாவே, அவர்கள் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானின் வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, பேதுரு சிறை வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு தூதன் வந்து, அங்கே இரகசியமான முறையில் கதவுகளைத் திறந்து அவனை வெளியே வழி நடத்தினான். 10 ஓ கர்த்தாவே, நீர் இன்னமும் தேவனாயிருக்கிறீர், இக்காலையில் அந்தத் தூதர்கள் உம்முடைய கட்டளையில் இருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் இங்கே இந்தத் தேவனுடைய வீட்டில் ஜெபித்துக் கொண்டிருக்கையில், அந்தத் தூதர்கள் சகோதரன் ராபர்ஸன் அவர்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவருடைய வாஞ்சை இங்கே அவருடைய ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால் துன்பமானது அவரை பிடித்து வைத்துக் கொண்டது. தேவனுடைய தூதர்கள் அவரை விடுவிக்கவும், அவர் தேவனுடைய வீட்டில் மீண்டும் அவருடைய ஸ்தானத்தை எடுக்கும்படியாக அவரை குணமாக்கவும் செய்வீராக. 11 மற்றவர்களும் கஷ்டத்தினூடாக வந்துள்ளனர். அவர்கள்—அவர்கள் சுகவீனமாய் இருந்து வருகின்றனர். ஒரு வயோதிக பெண்மணி தன்னுடைய கால தளர்வுற்ற நடையோடு அவளுடைய இருக்கையில் அமர தன்னுடைய கரங்களை உயர்த்தியவாறு சென்றதை நாங்கள் கண்டோம். அவள் சுகமாக்கப்பட வேண்டும் என்றே தேவனுடைய வீட்டிற்கு வந்திருக்கிறாள். கர்த்தாவே அவள் துள்ளிக்குதித்து ஒரு வாலிபப் பெண்மணியின் இளமையோடு வெளியே நடந்து செல்லும்படி அருள்புரியும். 12 தங்களுடைய கரங்களை உயர்த்தின மற்ற எல்லாரும், அவர்களில் அனேகர் மேலே உயர்த்தினர், ஏனென்றால், “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” என்று எழுதப்பட்டிருக்கிறதோ முன்னமே மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றதே! நாங்கள் இன்றைக்கு விசுவாசத்திற்குள்ளாக, விசுவாச கரங்களுக்குள்ளாக பறந்து செல்வோமாக. அதுவே எங்களை எல்லா சுகவீனங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும். ஆராதனையானது முடிவடைகின்றபோது, எங்கள் மத்தியில் உள்ள ஒருவரும் பெலவீனமாயில்லாதிருப்பார்களாக. 13 கர்த்தாவே, ஒவ்வொரு அவிசுவாசியும் ஒரு விசுவாசியாக மாற அருள்புரியும். நாங்கள் உம்முடைய வார்த்தையின் பேரில் தியானிக்கையில், பரிசுத்த ஆவியானவர் அதை எடுத்து, எங்களுடைய இருதயங்களில் அதை வைத்து, அது வார்த்தையின் கனியாக மாறும் வரைக்கும் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுவாராக. நாங்கள் எங்களுடையத் தலைகளைத் தாழ்மையாய்த் தாழ்த்தி, இதை இயேசுவின் நாமத்தில் கேட்கையில், கர்த்தாவே, எங்களுக்காக இதைச் செய்யும். ஆமென். நீங்கள் அமரலாம். 14 இக்காலைக்கான ஆராதனையின் செய்திக்குள்ளாக நாம் செல்லும் முன்னர் உங்களுடைய சிந்தைகளில் இதைச் சற்று கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களில் எவரேனும் பருவ கால விடுமுறை ஓய்வு நேரங்களைக் கொண்டிருந்து, திங்கட்கிழமை துவங்கி, ஒரு வாரத்திற்கு ஓஹையோ, மிடில் டவுனில் நடைபெறவுள்ள ஆராதனைகளில் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அது காம்ப் மைதானங்கள் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. 15 ஜீன் அவர்களே, உங்களுக்கு காம்ப் மைதானங்களின் பெயர் தெரியுமா? [சகோதரன் ஜீன் அவர்களோ, “அது மிடில் டவுன் என்ற இடத்திலிருந்து பன்னிரண்டு மைல்கள் தூரத்தில் இருப்பதாக கூறப்பட்டது” என்கின்றார்—ஆசி.] சகோதரன் சில்வான். மிடில்டவுன் ஒரு சிறிய பட்டிணமாயிருக்கிறது. ஏறக்குறைய இங்குள்ள ஜெபர்ஸன்வில்லைப் போன்றிருக்கும் என்று நான் உத்தேசிக்கிறேன். அது ஒரு கூடைப்பந்தாட்ட மையமாய் உள்ளது. சகோதரன் சில்வான் அவர்கள் அங்கே மேய்ப்பனாக இருக்கிறார். ஏறக்குறைய அறுபது சொச்சம் பேர்களின் ஒத்துழைப்பினைக் கொண்ட முழு சுவிசேஷ சபைகளின் சபை ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதால், காம்ப் மைதானங்கள் எங்குள்ளன என்பதை அவர்களால் உங்களுக்குக் கூறமுடியும். 16 அந்த காம்ப் மைதானத்தில் அனேக குடிசைகள் இருக்குமாம். எனவே அங்கு வரவிரும்புகிற ஜனங்களை அவர்கள் கவனித்துப் பேணுவார்கள் என்றே எனக்குக் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டங்கள் திங்கட்கிழமைத் துவங்கி சனிக்கிழமை வரை ஆறு நாட்கள் நடைபெறும். மற்ற சபைகளின் காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் நடைபெறாது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வழக்கமான ஆராதனைகளுக்குச் செல்வார்கள். சுகமளிக்கும் ஆராதனைகள் அல்லது ஒவ்வொரு இரவும் ஒரு வேளை வியாதியஸ்தருக்கான ஜெபம் ஏறெடுக்கப்படலாம். ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறீர்கள். அது ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் நடைபெறும். நீங்கள் பருவகால விடுமுறை ஓய்வு நேரங்களில் இருந்து கொண்டிருந்தால், உங்களுடைய பருவகால விடுமுறை ஓய்வு நேரம் இனி இருக்கப் போவதாயிருந்தால், நீங்கள் அதை இப்படிப்பட்ட ஒரு வழியில் அதைக் கழிக்க விரும்பலாம். பாருங்கள், அப்பொழுது நாங்கள் நிச்சயமாக உங்களை வரவேற்க மகிழ்ச்சியடைவோம். 17 கிறிஸ்தவ ஞானஸ்நானம் பண்ணப்பட்டிராத யாவரும் இக்காலையில் தரித்திருந்து, அதைக் குறித்து சிந்திக்கும்படி உற்சாகப்படுத்த நானும்கூட விரும்புகிறேன். இப்பொழுதிலிருந்து ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் தொடரவிருக்கும் ஞானஸ்நான ஆராதனைக்கு ஆயத்தமாயிருங்கள். அப்படித்தான் துவங்கும் என நான் எண்ணுகிறேன். அது இங்கே சபையிலேயே துவங்கும். 18 ஜனங்களை கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படும்படி உற்சாகப்படுத்த நாங்கள் மிகவும் சாதகமான மனமுடையவர்களாயும், இரட்சிப்பிற்கு அது இன்றியமையாததுமாயுள்ளது என்பதை அறிந்தவர்களாயும் இருக்கிறோம். ஏனென்றால், இது நம்முடைய கர்த்தரால் கடைசிக் கட்டளையாக, சபைக்கான அவருடைய கடைசிக் கட்டளையாக எழுதப்பட்டது. அதாவது, அவர் கடைசியாக சபைக்குக் கட்டளையிட்டபோது, அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” என்றார். ஆகையால் நாம் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்படுவது இன்றியமையாதது என்பதை நாம் அறிவோம். 19 இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய இருதயத்தில் உறுதிகொண்டு, அவர் பாவிகளை இரட்சிக்க மரித்தார் என்றும், அவர் மரித்து இரட்சிக்கும்படியான ஒருவராய் நீங்கள் இருந்தீர்கள் என்றும், உங்களுடைய பாவ மன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு வரவிரும்பி, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும், நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் ஒரு சீஷனாக இப்பொழுது மாறப்போகின்றீர்கள் என்ற உங்களுடைய உறுதியை எடுத்துக் கொண்டு, உலகிற்கு அதனைக் கூற விரும்பும் எவருக்கும் நாங்கள் இந்த ஆராதனையில் ஞானஸ்நானம் கொடுக்க மகிழ்ச்சியாயிருப்போம். 20 உங்களுக்கு செல்வதற்கு சபை இல்லாதிருக்குமாயின், அப்பொழுது நீங்கள் எங்களோடு ஐக்கியங்கொள்ளும்படி உங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இங்கு எங்களுக்கு அங்கத்தின உறுப்பினர்களே கிடையாது. இது எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும், கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்கள் எல்லோருக்குமான ஒரு திறந்த கூடாரமாய் இருக்கிறது. நாங்கள் ஸ்தாபன பாகுபாடற்றவர்களாக காணப்படுகிறோம். நாங்கள் எல்லா ஜனங்களுக்கும், அவர்கள் யாராயிருந்தாலும், என்ன நிறமாயிருந்தாலும், எந்த இனமாயிருந்தாலும் அல்லது என்ன கோட்பாடாயிருந்தாலும் பொருட்படுத்தாமல் வாசல்களைத் திறக்கிறோம். ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகிறீர்கள். “விருப்பமுள்ளவன் வரக்கடவன்.” உங்களுக்கு வேறெந்த சபையும் இல்லையென்றால், நீங்கள் எங்களோடு ஐக்கியங்கொள்ளும்படி வருவதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைவோம். சேர்ந்துகொள்ள ஒன்றுமேயில்லை. வாசல்கள் திறந்திருக்கையில் அப்படியே உள்ளே வந்து, எங்களோடு ஐக்கியங்கொள்ளுங்கள். அவ்வளவுதான் உங்களுக்குத் தேவை. எனவே அந்தவிதமாக அப்படியே உள்ளே வாருங்கள். திறந்த இருதயத்துடன் வந்து, முனைந்து ஈடுபட்டு, நாங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தின் நிமித்தமாக விரைந்து செயல்படுகையில் எங்களுக்கு உதவி செய்யுங்கள். ஏனென்றால் வேதாகமத்தில் உரைக்கப்பட்டுள்ள எல்லா காரியங்களும் நிறைவேற்றப்படும் வேளையானது சமீபித்துவிட்டது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 21 உங்களில் அநேகர் ஐக்கிய நாடுகளுக்கு அன்றொரு நாள் குருஷ்ஷேவ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையை வாசித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அது ஒரு நண்பரின் மூலமாக கனடா தேசத்துப் பத்திரிக்கையிலிருந்து எனக்கு எடுத்து மேற்கோள்காட்டப்பட்டது. அவர், “தேவன் ஒருவர் உண்டென்றால், அவர் முதலாளிகளாகிய உங்களைக் கொண்டு, அவர் ஆரம்பத்தில் செய்ததுபோன்றே, மீண்டும் ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும், துடைக்கவும் ஆயத்தமாயிருப்பார்” என்றார். ஆகையால் இப்பொழுது உங்களால், “அவர் மீண்டும் ஆலயத்தைத் துடைக்க ஆயத்தமாயிருக்கிறார்” எனும் வரியில் மறைந்துக் கிடக்கும் பொருளை அறிந்து கொள்ள முடியும். ஒரு பொது உடைமை வாதி பக்தியுண்டாக்கும், அதைப்போன்ற ஒரு காரியத்தைக் கூற வேண்டியதாயிருந்திருக்குமா? இருந்தபோதிலும் அவர் ஏதோ ஒரு காரியத்தை உடையவராயிருந்தார். அது உண்மை. துவக்கத்தில் அது முதலாளிகளாயிருந்து, அதுவே தொல்லையை விளைவித்தது. நாம் முதலாளிகளாயிருக்கிறோம். 22 நம்முடைய அருமையான, அன்புக்குரிய மேய்ப்பர் சகோதரன் நெவில் அவர்கள் தன்னுடையத் தொலைக்காட்சியின் பேரில்…இல்லை வானொலி ஒலிபரப்பின் பேரிலான ஒரு கருத்தைக்கூற அன்றொரு நாள் காலையில் நான் கேட்டேன். அது அப்படியே என்னுடைய சிந்தையில் பதிந்துவிட்டது. அதை என்னால் மறக்கமுடியவில்லை. நான் கடந்த இரவு என்னுடைய நண்பர் ஒருவருக்கு அதை எடுத்துக் கூறினேன். அது இதுவாயிருந்தது. அதுவே…இருக்கும்…பரிசுத்த ஆவியானது பூமியை விட்டு எடுக்கப்பட்ட பிறகு, அந்தச் சம்பிரதாயமான சபை மார்க்கமானது எந்த வித்தியாசத்தையுமே அறியாமல் தொடர்ந்து செயல்படும். நீங்கள் எப்போதாவது…எத்தனை பேர் அதைக் கேட்டீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] அது பெரும் வியப்பூட்டுதலாய் இருந்ததல்லவா? அவர்கள் பரிசுத்த ஆவியை அறியார்கள். எனவே அது போய்விடும்போது, அவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்படியே அதே விதமாகவே சென்று செயல்பட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள். கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக கடைசியான ஒருவர் முத்தரிக்கப்படும்போதும், அவர்கள் அப்படியே தொடர்ந்து சென்று, அதற்கு மனமாற்றமடைந்தவர்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வழக்கமாக இருந்து வந்தது போன்றே அவர்களுடைய சம்பிரதாயமான மார்க்கம் தொடர்ந்து செயலாற்றும். இப்பொழுது, அது எனக்கு பதிந்துவிட்டதுபோல உங்களுக்கு பதியாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மையாகவே ஒரு பெரும்வியப்பூட்டும் வாக்குமூலமாயிருந்தது. அதாவது அவர்கள் பரிசுத்த ஆவியைத் தவறவிடுமளவிற்கு மார்க்கரீதியான சடங்காச்சார முறைகளில் இருந்துகொண்டு அவ்வளவாய் தொடர்பின்றி இருக்கிறார்கள். ஏனென்றால் அது என்னவாயிருக்கிறது என்று துவக்கத்திலேயே அவர்கள் அறியாதிருக்கிறார்கள். 23 தேவன் நம்மீது இரக்கமாயிருப்பாராக. சகோதரனே, இந்த ஜீவியத்தில் அவருக்கு மிக மிகச் சிறிய துக்கம் நேரிட்டாலுங்கூட, அதை என் இருதயத்தில் அறிந்து கொள்ளுமளவிற்கு நான் ஜீவிக்க வேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையாயிருக்கிறது. அவரை துக்கப்படுத்தும் ஏதோ ஒன்றை நான் செய்தால், நான் அந்த நொடிப்பொழுதே அதை உணரக்கூடியவனாயிருக்க வேண்டும். 24 அவர் இல்லாமல் தனிமையாய் இருக்க நேரிட்டால், அவர் இங்கு இல்லாமலிருக்கும்போது, நான் இங்கு இருக்க விரும்பவில்லை. அப்பொழுது நானும் போய்விட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆம் ஐயா, ஏனென்றால் அப்பொழுது கிருபாசனத்தில் இரத்தமே இருக்காது. அது இருளாய், புகையாய், கருமையாய் இருக்கும். அந்த நேரத்தில் நம்முடைய வழக்கிற்கு வழக்காட அங்கே நியாயசாஸ்திரியே பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கமாட்டார். அதைக் கூறுகிற வேத வாக்கியத்தை நீங்கள் அறிவீர்களா? பரிசுத்த ஸ்தலம் புகைந்து கொண்டிருந்தது. கிருபாசனத்தில் இரத்தமே இல்லாதிருந்தது. அப்பொழுது அது நியாயத்தீர்ப்பாயிருந்தது. 25 கர்த்தர் இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச காலத்திற்கு, ஒரு சில இரவுகள் எழுப்புதல் கூட்டங்களை அருளுவாரானால் நலமாயிருக்கும். நான் இதை என் மனதில் வைத்துள்ளேன். அதாவது நான் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை எடுத்து, அதன் பேரிலான ஓர் ஆய்வினை செய்யும்படியாக அப்படியே வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தினூடாக தொடர்ந்து சென்று பிரசங்கிக்க விரும்புகிறேன். 26 இப்பொழுது, இன்றைக்கு அநேகர் ஜெபிக்கப்படுவதற்காக உள்ளே வருகின்றனர் என்பதை நான் அறிவேன். என்னுடைய அலுவலகமோ இன்றைக்கு, இல்லை, இந்த வாரம் மூடப்பட்டிருந்தது. எனவே சில ஜனங்கள் உள்ளே வந்திருந்தும் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்கான ஒரு தருணம் கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்தப் பையன்கள் ஒரு நாள் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ளும்படியாக அங்கே வெளியே சென்று விட்டிருந்தனர். அவர்கள் அதிகமான பணியை செய்ய வேண்டியதாயிருக்கிறது. அவர்களுடைய சொந்த பணி, இன்னும் கூடுதலாக கூடாரப்பணியும், மற்றும் என்னுடைய தொலைபேசி அழைப்புகள் மற்றும் எல்லாவற்றையுமே செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். எனவே அது உங்களை சீக்கிரத்தில் உங்களுடைய அமைதியை எளிதில் இழக்கச் செய்துவிடுகிறது. ஆகையால் அதுதான் காரணம். ஆகவே நான் எப்பொழுதாவது ஒருமுறை எங்காவது வெளியே சென்று, வித்தியாசமாக ஏதோ ஒரு காரியத்தைச் செய்தாக வேண்டும். அவர்களும்கூட அதை செய்கிறார்கள் என்பதை நான் அறியேன். ஆகையால் அவர்கள் என்னை அழைத்தனர். அப்பொழுது நான், “அது சரியாய் இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்றேன். இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். 27 நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்து கொஞ்சம் வாசிக்கலாம் என்று எண்ணினேன். இப்பொழுது நீங்கள் உங்களுடைய வேதாகமங்களை வைத்திருந்தால், நாம் ஏசாயாவின் புத்தகத்திற்கு திருப்புவோமாக. நீங்கள் உங்களுடைய வேத புத்தகத்தை எடுத்து அதை வாசிப்பதை நான் காண விரும்புகிறேன். நான் வாசிக்கிறேன்…நாம் வெறுமனே ஒன்று அல்லது இரண்டு வசனங்களுக்கு மேலாக வாசிக்கப்போவதில்லை. அதே சமயத்தில் அது தேவனுடைய நித்தியமான, அழிவில்லாத வார்த்தையாயிருக்கிறது. அது ஒருபோதும் ஒழிந்து போக முடியாது. ஏசாயா 55-ம் அதிகாரத்தில் “நித்திய இரட்சிப்பு” என்றுள்ள தலைப்பு. ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும், தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 28 நான் உங்களிடத்தில் ஒரு சில நிமிடங்கள், பணமுமின்றி விலையுமின்றி என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். 29 நம்முடைய நாட்களில் மிக அதிகமான மகிழ்வூட்டும் காரியங்கள் இருக்கின்றன. நாம் “இன்பங்கள்” என்று அழைக்கும் அநேகமானவை ஜனங்களை கவர்ந்திழுக்கும்படியாயுள்ளன. அது எல்லா ஜனங்களுக்குமானதாயும், எல்லா வயதினருக்குமானதாயும் உள்ளது. 30 வாலிப ஜனங்களுக்கான கவர்ச்சியூட்டுதல்களாக நவ நாகரீக நடனங்கள், அசைந்து—உருண்டு ஆடும் நடன விருந்துகள் மற்றும் அவர்கள் கொண்டுள்ள இசையும் அதனோடு இசைந்து செல்வதற்காகவே உள்ளது. எனவே அது கலை நிகழ்ச்சிக்கான முழுமையான கவர்ந்திழுத்தலாய் உள்ளது. 31 ஒரு பிள்ளை எப்படிப்பட்ட ஒரு நல்ல வீட்டில் வளர்க்கப்பட்டிருந்தாலும், எப்படித்தான் சரியானதைச் செய்ய அதற்கு கற்பிக்கப்பட்டிருந்தாலும், அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல; அந்தப் பிள்ளையானது புதிய பிறப்பின் அனுபவத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்குமானால், அப்பொழுது அது அசைந்து—உருண்டு ஆடும் நடன இசையை கேட்கின்ற மாத்திரத்தில், அந்த இசையானது அப்பிள்ளையினுடைய கவனத்தை கவர்ந்துவிடுகிறது. ஏனென்றால் அவனுக்குள்ளாக ஒரு மாம்சப்பிரகாரமான ஆவியானது இயல்பாகவே அவனுக்குள்ளாக பிறந்துள்ளது. எனவே அந்தச் சிறு பிள்ளையினுடைய ஆவியைப் பிடித்துக் கொள்ளும்படி இன்று பிசாசின் வல்லமை மிகவும் மகத்தானதாய் உள்ளது. 32 அப்படியானால் புதிய பிறப்பை புறக்கணித்திருக்கிற பெரியோர்களை அது எவ்வளவு அதிகமாய் பற்றிப்பிடிக்கும். ஏனென்றால் உங்களுடைய ஜீவியமானது மாற்றப்படுகிறபோது மட்டுமே, நீங்கள் மனமாற்றமடைந்திருக்கும்போது, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக புதியதாய் பிறக்கின்றீர்கள்; ஆனால் உங்களுக்குள் மாற்றமடைந்திருந்தாலொழிய நீங்கள் எவ்வளவு தான் பக்தியுள்ளவர்களாயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. உங்களுடைய சுபாவமோ உலகத்தின் காரியங்களில் இருந்தவிதமாகவே இருக்கும். உங்களால் ஆராதிக்க முடியும். பக்தியுள்ளவர்களாய் இருக்க முடியும். ஆனால் இன்னமும் ஒருவிதமாக உங்களை வலிந்து இழுக்கும் வல்லமை அப்படியே இருக்கும். ஏனென்றால் இந்தப் பழைய பாவ மனுஷனும் அவனுடைய வாஞ்சைகளும் இன்னும் உங்களுக்குள்ளாக மரிக்கவில்லை. 33 ஆனால் கிறிஸ்துவானவர் ஒருமுறை உங்களுடைய இருதயத்தில் உள்ள சிங்காசனத்தை எடுத்துக் கொள்ளட்டும். அப்பொழுது அந்தக் காரியங்கள் தொல்லைப்படுத்தாது. அது அவ்வளவு மகத்தானதாயிருக்கிறது. 34 என்னால் அந்த மனிதனுடைய பெயரைக் குறிப்பிட்டுக் கூற முடியாது. ஏனென்றால் இப்பொழுது அவருடைய பெயரை என்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் உங்களில் அநேகருக்கு அவரை நினைவிருக்கும். ஒரு தீவு இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது புருஷர்கள் அங்கே செல்லும்போது, அங்குள்ள பதுங்கிடத்திலிருந்து பெண்கள் வெளியே வந்து பாடுவார்களாம். அவர்களுடைய பாடல்கள் மிகுந்த ஆவலூட்டி ஏய்ப்பதாயிருக்குமாம். அப்பொழுது அந்தக் கப்பல்களில் உள்ள கப்பலோட்டிகள் கடந்து செல்லுகையில் உள்ளே வருவார்களாம். அப்பொழுது அந்தப் பதுங்கிடத்தில் உள்ள வீரர்கள் விழிப்பற்றிருக்கிற இந்தக் கப்பலோட்டிகளைப் பிடித்து, அவர்களைக் கொன்று போடுவார்களாம். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட மகத்தான மனிதன் அந்த இடத்தைக் கடந்து செல்ல வேண்டியவனாயிருந்தானாம். ஆனால் அவனோ தன்னுடைய கப்பலோட்டிகளைக் கொண்டு தன்னை ஒரு கப்பற்பாய்மர கம்பத்தில் கட்டச் செய்து, அவனால் கூச்சலிட்டுக் கதற முடியாதபடிக்கு அவனுடைய வாயில் ஏதோ ஒன்றை வைத்து அடைத்துக் கொண்டானாம். அது மட்டுமின்றி தன்னுடைய கப்பலோட்டிகளும் கடந்து செல்லும்போது அதைக் கேட்கக்கூடாதபடிக்கு அவர்களுடைய காதுகளிலும் அடைப்பானை வைத்து அடைத்துவிட்டானாம். அப்பொழுது ஸ்திரீகள் வெளியே வந்து நடனமாடி, கூச்சலிட்டு பாடினார்களாம். அப்பொழுது அவன் பின்னாக கட்டப்பட்டிருந்த தன்னுடைய மணிக்கட்டுகளை முறுக்கி திருப்பி, தன்னுடைய கப்பலோட்டிகளை நோக்கி, “திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்” என்று கூச்சலிடுமளவிற்கு ஓ, அது அவ்வளவு மகத்தானதாய் இருந்ததாம். ஆனால் அவர்களோ அவன் கூறுவதை கேட்க முடியாதிருந்ததாம். ஏனென்றால், அவன் அவர்களுடைய காதுகளிலும் அடைப்பான்களை வைத்துவிட்டிருந்தானாம். 35 அதன் பின்னர் அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பயணித்தபோது, அங்கு அவர்கள் அவனுடைய முகத்திரையை நீங்க வேண்டியிருந்ததாம். இல்லை அவனுடைய கரங்களை அவிழ்த்துவிட வேண்டியிருந்ததாம். அப்பொழுது அவனும் அவர்களுடைய காதுகளிலிருந்து அடைப்பான்களை எடுக்க வேண்டியிருந்ததாம். பின்னர் அங்கே அவர்கள் வீதிகளில் நடந்து செல்லுகையில், அவன் முன்பு கேட்டதைப் போன்றில்லாத சிறந்த ஓர் இசையை அங்கே கேட்டானாம். அப்பொழுது அவன் அதனருகில் மீண்டும் கடந்து செல்கையில் அவர்கள், “ஓ, பெரிய கடற்கொள்ளைக்காரன், நாங்கள் உம்மை மீண்டும் கப்பற்பாய்மர கம்பத்தில் கட்டலாமா?” என்று கேட்டார்களாம். 36 அவனோ, “வேண்டாம், என்னை கட்டாமலே விட்டு விடுங்கள். ஏனென்றால் என்னை ஒருபோதும் தொல்லைப்படுத்தாத அளவிற்கு, அந்தளவிற்கு மிக மகத்தான ஒன்றை நான் கேட்டுவிட்டேனே” என்றானாம். 37 அந்த விதமாகத்தான் மீண்டும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் இருக்கிறான். அவர்கள் அசைந்து—உருண்டும் ஆடும் நடனங்கள் மற்றும் இந்த உலகத்தின் கலை நிகழ்ச்சிகளைக் காட்டிலும் மிகவும் மகத்தான ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் மகிழ்வூட்டப்படுகின்றனர். அது உலகமானது அவர்களுக்கு மரித்ததாயிருக்குமளவிற்கு அவ்வளவு மகத்தானதாய் இருக்கிறது. 38 ஆனால் நீங்கள் இந்த மலிவான பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நீங்கள் ஏராளமான பணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான விருந்துகளுக்கும், இந்த மாதிரியான நடனங்களுக்கும் தன்னுடைய பெண் சினேகிதியை அழைத்துச் செல்கிற ஒரு வாலிப நபர் தன்னுடைய வார சம்பாத்தியத்தில் பெரும் பகுதியானப் பணத்தை கிரயமாக செலுத்தப்போகிறான். மதுபான கடைகளில் குடித்து தங்களுடைய வாராந்திர துக்கங்களை போக்கும்படியான இன்பத்தைக் கண்டறிய முயற்சிக்கிற வயோதிக ஜனங்களும், பெரிய தொகையை அவர்கள் செலுத்தும்படிக்கே செல்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறார்கள்? அவர்கள் கடுந்துயரத்தைத்தவிர வேறொன்றையுமே பெற்றுக்கொள்கிறதில்லை. 39 நீங்கள் என்றோ ஒரு நாள் அதற்காக தேவனிடத்தில் கணக்கொப்புவிக்க வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். “பாவத்தின் சம்பளம் மரணம்.” நீங்கள் அதனைக் கொண்டு இப்பூமியின் மேல் இங்கு ஒன்றையுமே நிலைநாட்டுகிறதில்லை. அது ஒரு போலியான மாயத்தோற்றமாயிருக்கிறது. குடித்தல் துக்கத்தை மாத்திரமே கூட்டிச் சேர்க்கும். பாவமானது மரணத்தின் மேல் மரணத்தை மட்டுமே கூட்டும். உங்களுடைய முடிவான முறிவோ நித்தியமாக தேவனிடத்திலிருந்து வேறுபிரிதலாயும், அக்கினிகடலுக்குள் செல்வதாயுமிருக்கும். நீங்கள் நஷ்டப்படுவதைத் தவிர வேறெந்தக் காரியத்தையுமே ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது. 40 ஆகையால் தேவன் வந்து, “நீங்கள் திருப்தி செய்யாத அந்த பொருள்களுக்காக ஏன் உங்களுடைய பணத்தை செலவழிக்கிறீர்கள்? நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?” என்ற கேள்வியினைக் கேட்கிறார். 41 மனிதனை அதைச் செய்யும்படி செய்கிறது எது? அவர்கள் வைத்திருக்கிற எல்லாவற்றையும், அவர்களால் சம்பாதிக்க முடிந்த எல்லாவற்றையும் மதுபானம் வாங்கவும், ஏதோ ஒரு ஸ்திரீயோடு சுற்றித்திரிய அவளுக்கு ஆடைகளை பரிசாக அளிக்க அல்லது ஒருவிதமான உலகபிரகாரமான, இச்சையான சுகபோக இன்பங்களுக்காகவுமே செலவழிக்கின்றார்கள். 42 ஆனால், “நித்திய சந்தோஷத்தையும், நித்திய ஜீவனையும் பணமுமின்றி, விலையுமின்றி வாங்கிக்கொள்ளும்படிக்கு” தேவனிடத்தில் வர அழைப்பு விடப்பட்டிருப்பதாக வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ளது. 43 அந்தக் காரியங்களோ திருப்தியளிக்க முடியாது. அவைகளின் முடிவு நித்திய மரணமாயுள்ளது. நீங்கள் பெரும்புள்ளியாயிருக்கும்படியாகவோ அல்லது மகிழ்வூட்டுபவராயிருக்கும்படியாகவோ அல்லது வேடிக்கையான பையனாயிருக்கும்படியாகவோ அல்லது நீங்கள் யாராயிருந்தாலும் அல்லது புகழ் வாய்ந்த பெண்ணாயிருந்தாலும் அல்லது அது என்னவாயிருந்தாலும், உங்களால் ஒன்று திரட்டி சேகரிக்க முடிந்த பணம் யாவுமே அதற்குக் கிரயமாகும் அதைச் செய்ய நீங்கள் சேமிக்கிற யாவுமே அதற்கு கிரயமாகிறது. மிகவும் உயரிய ஆடைகளை உடுத்தி, உலகம் செய்கிற காரியங்களைச் செய்தாலும், நித்திய ஆக்கினையின் ஒரு சரிக்கட்டுதலை மாத்திரமே அறுப்பீர்கள். 44 அப்பொழுது தேவன், “ஏன்?” என்று கேட்பார். நாம் ஏன் அதைச் செய்தோம் என்று நாம் கேட்கப்படும்போது, நியாயத்தீர்ப்பு நாளிலே நாம் என்ன செய்யப்போகிறோம்.? நம்முடைய பதில் என்னவாயிருக்கப்போகிறது? தங்களை ஒரு கிறிஸ்தவ தேசம் என்று கூறிக்கொள்கிற நவநாகரீக அமெரிக்கா என்ன பதிலை கூறப்போகிறதாயிருக்கிறது? ஒரு வருட காலத்தில் ஆகாரத்தைப் பார்க்கிலும் மதபானத்திற்கு அதிகமான பணமானது செலவழிக்கப்பட்டிருக்கிறது. “அந்த விதமான காரியங்களுக்கு ஏன் உங்களூடைய பணத்தை செலவழிக்கிறீர்கள்?” அதே சமயத்தில் ஒரு மிஷினரியை கடல் கடந்து அனுப்புவதற்கு நீங்கள் அனுப்பியிருந்த ஐந்து டாலர் பொறுமானமுள்ள வரிப்பணத்தை முறைப்படி வரிகளைப் பெற்றுக்கொள்ள அமைந்திருக்கும் ஏதோ ஒரு நிறுவனம் சரியாக பெற்றுக்கொள்ளாததால் அரசாங்கமானது உங்களைச் சிறைச்சாலைக்கு அனுப்பும். என்றோ ஒருநாள், “நீங்கள் ஏன் அதைச் செய்தீர்கள்?” என்று நாம் கேட்கப்படத்தான் போகின்றோம். 45 நாம் ஒரு கிறிஸ்தவ தேசமாயிருக்கிறோம். கோடிக்கணக்கானவர்கள் அங்குள்ள அந்த ஜனங்களண்டை அனுப்பப்படுகின்றனர். அதாவது நாம் அவர்களுடைய நட்பைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது அவர்கள் அதை புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள். எனவே குருஷேவ் அவர்கள், “தேவன் ஒருவர் இருப்பாரானால், அவர் தம்முடைய அரண்மனையை மீண்டும் துடைத்து சுத்தம் செய்வார்” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. நம்மீது அவமானத்தைக் கொண்டுவரும்படியாக அஞ்ஞானிகளால் இத்தகைய அறிவிப்புகளைக் கூற முடிகிறது. அது என்னே ஒரு முட்டாள்தனமான காரியமாய் இருக்கிறதே! நாமோ நம்மை கிறிஸ்தவர்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம். 46 தேவன், “வந்து, பணமுமின்றி விலையுமின்றி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படியான ஜீவன், நாம் அதின்பேரில் நம்முடைய புறமுதுகைக்காட்டி, அவருடைய முகத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறோம். அந்நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம்? அது என்னவாயிருக்கப் போகிறது. 47 தேவன் முனைந்து செய்லாற்றும்படியான காரியங்களை நமக்கு அளித்து, நமக்கு பணத்தையும் அளித்து, வானத்தின் கீழ் நம்மை ஐஸ்வரியமான தேசமாக ஆக்கியிருப்பாரேயானால், அப்பொழுது தேவன் அதனைக் கொண்டு நாம் என்ன செய்தோம் என்று கேட்கப்போகிறார். நாம் ஏன் நம்முடைய பணத்தை திருப்தி செய்யாத காரியங்களுக்காக செலவழிக்கிறோம்? ஒரு தேசத்திற்கு மட்டுமல்ல; ஆனால் அது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்குமானதாய் இருக்கும். சில்லறையிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் வரை செலவழிக்கப்படும் ஒவ்வொன்றிற்குமேயாகும். 48 மனிதர்கள் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விடுகின்றனர். நான் அண்மையில் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அதில் ஒரு வேட்டை முகாமில் இரண்டு பையன்கள் பணிபுரிந்து கொண்டிருந்தார்களாம். அதில் ஒருவனுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனவாம். மற்றவனுக்கோ இரண்டு பிள்ளைகள் இருந்தனவாம். அவர்களில் ஒருவனை தற்காலிகாமாக பணியிலிருந்து நீக்கி வைத்திருக்க வேண்டியதாயிருந்ததாம். அப்பொழுது இரண்டு பிள்ளைகளையுடைய அந்த பையன்களில் ஒருவன் இல்லை ஐந்து பிள்ளைகளையுடையவன் இரண்டு பிள்ளைகளையுடையவனைப் பார்க்கிலும் அதிக ஊதியப்பணி அவனுக்கு தேவைப்பட்டதை உணர்ந்து, அவனோடு வேட்டைக்குச் சென்று அவனுடைய முதுகில் அவனை சுட்டுவிட்டானாம். 49 பணமே என்ற அந்தவிதமான ஒரு தேசமாயும், அந்த விதமான ஓர் உணர்வுடையதாயும், அது ஜனங்களை அதிகாரம் செலுத்துகிற ஒரு விதமான ஆவியாயுமிருக்கிறது. 50 ஆகையால் புதிய பிறப்பானது இருக்க வேண்டியது எவ்வளவு இன்றியமையாததாய் உள்ளது என்பதை உங்களால் காணமுடியும். “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்.” அது இருக்கத்தான் வேண்டும். “பணமின்றி என்னிடத்தில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்.” 51 எனவே, “என்னிடத்தில் பணம் இல்லை” என்று உங்களால் கூறமுடியாது. உங்களுக்கு எந்தப் பணமும் தேவையே இல்லை. அது இலவசமாய் அளிக்கப்படுகிறது. 52 அமெரிக்கர்களாகிய நாம் ஒவ்வொன்றிற்காகவும் நம்முடைய வழியில் பணத்தை செலவழிக்கும்படியான அவ்வளவு சாதகமான மனச்சாய்வுடையவர்களாயிருக்கிறோம். அதுவே நம்முடைய கொள்கைக் குரலாயிருக்கிறது. “நாம் எல்லா காரியங்களுக்காகவும் பணம் செலுத்துகிறோம். நாம் பணம் வைத்துள்ளோம்.” நம்முடைய டாலர் நோட்டுகள் ஏழ்மையாயிருக்கிற மற்ற நாடுகளுக்கும் சென்று ஒளிர்கின்றன. பெருமையானதும், நேர்த்தியானதுமான எல்லாவற்றிற்குள்ளும் உள்ளே நடந்து சென்றால், சுற்றுலாவினர் அங்கே உள்ளே வருவதை நீங்கள் காண்கிறீர்கள். அமெரிக்கர்கள் அவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள். அந்தக் காரியம் தேவனுடைய பார்வையில் அசுத்தமானதாயும், கீழ்த்தரமான ஆதாய வருமானமாயுள்ளது. அது பரலோகத்திற்கு செல்லும் நம்முடைய வழியைக் கொள்ளாது. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் நம்முடைய வழியில் பணம் செலுத்த வேண்டும். 53 நீங்கள் உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய இரவு உணவினை புசிக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் மேஜையின் மீது உணவினை பரிமாறுபவளுக்கு இனாமாக கொஞ்சம் பணம் வைக்கவில்லையென்றால், அங்கே முகச்சுளிப்பு அவளுடைய முகத்தில் உண்டாகிறது. அந்த நிறுவனத்தினரால் அவளுக்கு செலுத்தப்படுகிற ஊதியத்தின்படியே அவள் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஆயினும் உங்களுடைய கட்டணத்தோடு குறைந்தபட்சம் பத்து சதவீதம் அல்லது சற்று கூடுதலாக செலுத்த வேண்டியதாயுள்ளது. நீங்கள் அவ்வாறு செலுத்தவில்லையென்றால், அந்த உணவு பரிமாறுபவள் உங்களை ஒரு கஞ்சனைப் போல அல்லது ஒரு விதமான பணப்பேராசை கொண்டவன் என்பதைப் போல இழிவாகப் பார்ப்பாள். அவள் தன்னுடைய பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள். அதைச் செய்வது ஓர் அவமானமாயும், ஒரு வெட்கக்கேடாயுமிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அது இந்த தேசத்தின் மீதான பரிதாபமான நியாயத்தீர்ப்பாயிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். வழக்கமாக நல்ல ஜனங்கள் நல்ல இடங்களில் அதை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இவை யாவுமே ஒரு பெரிய ஆவிக்குள்ளாக சென்று கொண்டிருக்கின்றன. 54 நான் ஓர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சுமை சுமப்பவன்…நான் ஒரு சிறு கைப்பெட்டியை ஒரு கையிலும், மற்றொரு கையில் ஒரு பெரிய பெட்டியையும், என்னுடைய சவரப்பொருட்களைக் கொண்ட சிறு பையை கையின் கீழே வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது மூட்டைகளை சுமப்பவன் ஒருவன் வந்து, “நான் அதை உங்களுக்காக தூக்கிக் கொண்டு வரலாமா?” என்று கேட்டான். 55 நானோ, “ஓ, ஐயா, நான் அங்குள்ள அந்த இரயில் வண்டியினிடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன். உமக்கு நன்றி, மிக்க நன்றி” என்று கூறினேன். ஓ, அது ஏறக்குறைய வெறுமனே முப்பது கெஜ தூரம் மட்டுமே. 56 அவனோ, “நான் தூக்கி வருவேன்” என்றான். எனவே அவன் அந்தச் சிறு கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு, அதை தூக்கிக் கொண்டு நடந்து வந்தான். 57 பாருங்கள், அவன் அங்கு வந்தடைந்தவுடனே, நானோ, “ஒருக்கால்…அவனுக்கு ஏற்கனவே கட்டணம் செலுத்தப்பட்டிருக்கும் என்றும், ஆனாலும் நான் அவனுக்கு அரை டாலர் பணம் தரலாம்” என்றும் எண்ணினேன். அநேகமாக அவன் சம்பளத்திற்கு பணிபுரியபவனாய் இருக்கலாம், ஆயினும் என்னுடைய பொருட்களை ஏறக்குறைய இந்தக் கூடாரத்தின் கடைசி முனைவரையுள்ள தூரத்திற்கு சுமந்து கொண்டு வந்து, அங்கே அவன் அந்த இரயிலில் ஏற்றியபடியால், நான், “ஒரு நிமிடம் இரு” என்று கூறி, நான் முதலில் இரயிலில் ஏறிக்கொண்டு, என்னுடைய சட்டைப்பையில் கையை விட்டு பணம் எடுத்தேன். பின்னர் நான் அவனுக்கு அரை டாலர் கொடுத்தேன். அதற்கு அவனோ, “ஒரு நிமிடம்” என்றான். நான், “ஐயா, இதற்கு என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவனோ, “நான் மூன்று பைகளைக் கொண்ட சுமையை உமக்காக சுமந்து வந்தேனே!” என்றான். நானோ, “ஆம் ஐயா, அது உண்மைதான். என்ன. இதில் என்ன தவறு உள்ளது?” என்று கேட்டேன். 58 அப்பொழுது அவன், “ஒரு பைக்கு என்னுடைய குறைந்தபட்ச கட்டணம் இருபத்தைந்து செண்டுகள். எனவே நீர் இன்னுமொரு இருபத்தைந்து செண்டுகள் எனக்கு கொடுக்க வேண்டியவராயிருக்கிறீர்” என்றான். பாருங்கள், அதுவே அமெரிக்க கொள்கையாயிருக்கிறது. ஒவ்வொரு காரியத்திற்கும் பணம் செலுத்தப்பட வேண்டியதாயிருக்கிறது. 59 நீங்கள் உங்களுடைய காரில் பயணம் செய்கையில், அது சாக்கடை பள்ளத்திற்குள் விழ நேரிட்டால், நீங்கள் அதை வெளியே இழுக்க யாரோ ஒருவரை அழைத்து வருவீர்கள். அப்பொழுது நீங்கள் அதற்கு பணம் செலுத்த ஆயாத்தமாயிருப்பதுமேலாகும். ஏனென்றால் அதற்காக அவர்கள் உங்களிடத்தில் கட்டணம் வசூலிக்கப்போகிறார்கள். சேதத்திலிருந்து மீட்கும் ஒருவர் வந்து உங்களை மீட்கிறார். அவர் ஒரு மைல் தூரம் என்று அவ்வளவாய் அளவிட்டு உங்களிடத்தில் கட்டணம் வசூலிப்பார். விவசாயியாக இருப்பாரானால், அவருடைய எந்திர கலப்பை வண்டியினால் (Tractor) வெளியே எடுக்க கிட்டத்தட்ட எல்லாவற்றிற்குமே கட்டணம் வசூலிப்பார். அது அதைவிட மோசமாய் இருக்கும். 60 நீங்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு காரியத்திற்காகவும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு காரியத்திற்கும் “செலுத்த வேண்டியது பணமே! செலுத்த வேண்டியது பணமே!” ஆகும். 61 அதே சமயத்தில் பாவமானது எவ்வளவு பெரிய சாக்கடை பள்ளத்திற்குள் உங்களை தூக்கியெறிந்துள்ளது. அந்தப் பாவ சாக்கடைப் பள்ளத்திலிருந்து உங்களை யாரால் தூக்கி எடுக்க முடிந்தது? ஆனால் உங்களை எவருமே அதிலிருந்து தூக்கியெடுக்க முடியாமலிருக்கும்போது, பணமுமின்றி, விலையுமின்றி தேவன் உங்களை அந்தப் பாவ சாக்கடை பள்ளத்தாக்கிலிருந்து தூக்கியெடுக்கிறார். 62 நீங்கள் உங்களுடைய மீட்பின் பணியினைச் செய்து உங்களை இழுப்பவருக்கு பணம் செலுத்தவில்லையென்றால், நீங்கள் சாக்கடைப் பள்ளத்தாக்கிலேதான் இருப்பீர்கள். நீங்கள் பணம் செலுத்தியாக வேண்டும். இல்லையென்றால் நீங்கள் சாக்கடையில் தரித்திருக்க வேண்டும். 63 ஆனால் நீங்கள் எப்போதுமிருந்ததிலேயே மிக மோசமான சாக்கடைப்பள்ளம் எதுவென்றால் பிசாசு உங்களைப் பாவம் மற்றும் அவிசுவாசம் எனும் சாக்கடைக் குழியில் தள்ளினதேயாகும். தேவனோ பணமுமின்றி, கிரயமுமின்றி உங்களை வெளியே இழுக்க மனப்பூர்வமான விருப்பமுள்ளவராயிருக்கிறார். ஆனால் நீங்கள் இன்னமும் அப்படியே உளையான பாவச்சேற்றில் கிடந்து, அந்தச் சாக்கடைக்குழியிலேயே கிடந்து கொண்டு, அவரை நோக்கி கூப்பிடாமலும்கூட இருக்கிறீர்கள். 64 உங்களை மீட்டெடுப்பவர் வெளியே எடுக்கும்போது, வழக்கமாக ஒரு பெரிய சங்கிலியை பள்ளத்திற்குள்ளாக விட்டு, அதை காரின் முன்புறமுள்ள தடுப்புக் கம்பியில் சுற்றி கட்டித் திருப்பி, இழுக்கத் துவங்குவார். காரினுடைய இயந்திர சக்தி இழுக்கத் துவங்குகிறது. உங்களை வெளியே இழுக்க இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. 65 தேவன் உங்களைப் பாவத்தின் பள்ளத்தில் கண்டறியும் போது, நீங்கள் அவரைக் கூப்பிடுவதைக் கேட்கும்போது, அவர் கல்வாரியில் சுற்றப்பட்டிருந்த தேவ அன்பு எனும் ஒரு சங்கிலியை கீழே அனுப்ப, அது உங்களுடைய இருதயத்திற்குள்ளாக கொக்கி போட்டுப் பிடித்துக் கொள்ள, அங்கே பரிசுத்த ஆவியின் வல்லமையை வைத்து இழுக்கத் துவங்குகிறார். அது உங்களுக்கு எந்த கிரயத்தையுமே கேட்கிறதில்லை. ஆனால் அதே சமயத்தில் நாமோ பள்ளத்திலேயே கிடக்கிறோம். ஏனென்றால் நம்மால் அதற்கு நம்முடைய சட்டைப் பையிலிருந்து கிரயம் செலுத்த முடியவில்லை. அமெரிக்கர்களாகிய நாமோ நம்முடைய சட்டைப் பையிலிருந்து நம்மால் அதற்கு கிரயம் செலுத்த முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் உங்களால் முடியாது. அது பணமுமின்றி விலையுமின்றினதாய் உள்ளது. நீங்கள் அதற்கு சபையிலேயும் கிரயம் செலுத்துகிறதில்லை. இயேசுவானவரோ கல்வாரியிலே அதற்கு கிரயம் செலுத்திவிட்டார். ஆனால் ஜனங்களோ அதைக் குறித்து வெட்கப்படுகின்றனர். அவர்கள் அதைத் தங்களுடைய வழியில் பெற விரும்புகிறார்கள். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்படியான ஒரு வழியை தேவன் உடையவராயிருக்கிறார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களானால் அது இலவசமானதாயுள்ளது. 66 வழக்கமாக அவர்கள் உங்களைப் பள்ளத்திலிருந்து இழுக்கும்போது, நீங்கள் முழுவதும் கீறலடைந்து, காயமடைந்து, நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அவர்கள் உங்கள் பேரில் சேவை செய்யத் துவங்குவதற்கு முன்னர் ஒரு காரியம் செய்யப்படுகிறது. அதாவது அவரகள், “யார் உங்களுடைய ரசீதுக்கு கட்டணம் செலுத்தப் போகிறார்கள் என்றும், நாங்கள் காயங்களுக்கு தையலிடப் போவதாயிருந்தால், நாங்கள் அதில் எண்ணெய்யை வார்க்கப் போவதாயிருந்தால், அந்த இரத்த விஷத்திலிருந்து பாதுகாக்க உங்களுக்கு சில நோய் தடுப்பு ஊசிகளைப் போடுவோம். எனவே நீர் எந்தக் காப்பீட்டுத் திட்டத்தை உடையவராயிருக்கிறீர்?” என்று கேட்பார்கள். அவர்கள் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பு அதற்கு பணமானது ஆயத்தமாயிருக்க வேண்டும். 67 ஆனால் நம்முடைய கர்த்தர் தம்முடைய அன்பின் சங்கிலியை உங்களுடைய இருதயத்தைச் சுற்றிலுமாய் இணைத்து, உங்களைப் பாவ பள்ளத்திலிருந்து இழுக்கும்போது, அவர் நொறுக்குண்ட ஒவ்வொரு இருதயத்தையும் குணமாக்கி, எல்லா பாவத்தையும் எடுத்துப் போடுகிறார். அது இனி ஒருபோதும் உங்களுக்கு எதிராக நினைவுகூரப்படாதபடிக்கு அந்தக் கிரயச்சீட்டு மறதியெனும் சமுத்திரத்தில் போடப்படுகிறது. “வாருங்கள், பணமுமில்லை, விலையுமில்லை.” நீங்கள் எவ்வளவுதான் ஆழ்ந்த துயருக்குட்பட்டிருந்தாலும் கவலையேப்பட வேண்டியதில்லை. நீங்கள் எவ்வளவு தான் நொறுக்கப்பட்டிருந்தாலும், உங்களுடைய குடும்பங்கள் எவ்வளவோ செய்திருந்தாலும் அல்லது நீங்கள் என்ன செய்திருந்தாலும் அதற்குக் கிரயக் கட்டண இரசீதே கிடையாது. அவர் இருதய வேதனைகளை குணப்படுத்தி உங்களுடைய எல்லா துயரங்களையும் எடுத்துப் போடுகிறார். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதனத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” இவையாவுமே இலவசமானதாயுள்ளது. 68 நாம் தவறான ஆவியினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற காரணத்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் தேவனுடைய ஆவியினால், சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழி நடத்துகிற, நமக்கு வழிகாட்டுகிற, வேதாகமத்தின்படியே நம்மை ஆயத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதற்குப் பதிலாக உலகத்தின் ஆவியினால், ஒரு தேசத்தின் ஆவியினால் ஆளுகை செய்யப்படுகின்றோம். 69 கொஞ்ச காலத்திற்கு முன்னர் நான் மதநம்பிக்கையற்ற ஒருவனிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவன், “திரு.பிரான்ஹாம் அவர்களே, இதைக் குறித்து சிந்தியுங்கள். எல்லா துன்பமும் நிறைந்த இந்த ஜீவியத்தில் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சில யூத நூல்களில் உள்ளதே நாம் பெற்றுள்ள ஒரே காரியமாகும்” என்றான். 70 “ஓ”, நானோ, “ஐயா, நீர் பெற்றுள்ளது ஒருக்கால் அதுவாக இருக்கலாம். ஆனால் நான் அதைக் காட்டிலும் சற்று மேலான ஒன்றை பெற்றிருக்கிறேன். நான் அதை எழுதின அந்த ஒருவருடைய ஆவியையே பெற்றிருக்கிறேன், அது இதனை உறுதிப்படுத்துகிறது, ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், அதனை அப்படியே தத்ரூபமாக்குகிறது” என்றேன். அதை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிந்திருக்கவில்லை. 71 பாருங்கள், நீங்கள் வந்து பணமுமின்றி, விலையுமின்றி பெற்றுக்கொள்ள வேண்டும். அது எந்தக் கிரயத்தையும் கேட்கிறதில்லை. அது “விருப்பமுள்ளவனுக்கு இலவசமானதாய் உள்ளது. எனவே அவன் வரட்டும்.” தேவன் உங்களைப் பள்ளத்திலிருந்து இழுக்கிறார். 72 அலங்கார வாசலண்டையிலிருந்த மனிதனைப் போன்றேயாகும். அவன் தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்தது முதற்கொண்டே பிசாசினால் தன்னுடைய கால் முடமாக்கப்பட்டிருந்தபடியால் அவன் இடித்துத் தள்ளப்பட்டிருந்தான். அவனுடைய ஜீவனத்தின் பிழைப்பிற்காக வழியில் அங்கு கடந்து செல்கிற ஜனங்களிடத்தில் கெஞ்சிப் பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அவன் அந்த வாசலண்டையிலே அக்காலையில் அமர்ந்திருந்தபோது, அவன் இரண்டு பெந்தெகோஸ்தே பிரசங்கிமார்கள் வருவதைக் கண்டான். அவர்களிடத்தில் ஒரு வெள்ளிக்காசும் இலை, ஏனென்றால் அவன், “என்னிடத்தில் வெள்ளியும் இல்லை” என்று கூறினான். வெள்ளிக்காசு என்பது மிகச் சிறிய துண்டு வெள்ளியாகும். “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை.” 73 அந்த மனிதன் இந்தவிதமான ஏதோ ஒரு காரியத்தை நினைத்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். “என்னுடைய பிச்சைப் பாத்திரத்தை எடுக்க வேண்டியதில்லை,” அவன் ஒருக்கால் போதுமான பணத்தை சேமிக்க முயற்சித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவன் நாற்பது வயதுடையவனாயிருந்தான். அவன் பலவீனமடைந்திருந்தபடியால், அவனுடைய கணுக்காலில் இடுப்பு காலுறை தளைப்பட்டைகளைக் கொண்ட ஒரு ஜோடி காலணிகளை வைத்தியர்கள் அவன் நடக்கும்படி செய்துதர ஒருக்கால் அவன் போதுமான பணத்தை சேமிக்க முயற்சித்துக் கொண்டிருந்திருக்கலாம். வைத்தியர்கள் அவனுக்கு உதவி செய்யும் முன்னரே அவன் அதற்கான பணத்தை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டியதாயிருந்திருக்கலாம். எனவே ஒன்றுமேயில்லாதிருந்த இந்தப் பெந்தெகோஸ்தே பிரசங்கிமார்களிடத்தில் தன்னுடைய பிச்சைப் பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் நிச்சயமாகவே இல்லாதிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், அவர்கள்…அந்த நபர்களிடமிருந்து ஒரு காசைக்கூட கண்டறியக் கூடாதபடி மிகுந்த ஏழைகளாய் இருந்தனர். 74 ஆனால் அவன் அவர்களுடைய முகத்தை நோக்கிப் பார்த்தபோதோ, ஒருவன், வாலிபன், நாணங்கொண்ட வாலிபத்தோடிருந்தான். மற்றொருவனோ, வயோதிகமும், சுருக்கங்கொண்டவனுமாயிருந்தான். யோவான்…பேதுருவும், யோவானும் வாசலண்டை சென்றார்கள். அப்பொழுது இவன் அந்த வாலிபனான மனிதனுக்குள் ஏதோ ஒன்றைக் கண்டான். அந்த நாணம் வழக்கத்திற்கு மாறுபட்ட ஒரு சிறு மேம்பட்ட வேறுபாட்டையுடையதாயிருந்தது. இவன் சுருக்கங்களும், அக்கறைகளும்கொண்டு, சூரியன் பொசுக்கியிருந்ததாய் காணப்பட்ட வயோதிக கலிலேய மீனவனின் முகத்தில், “சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமாயிருந்த சந்தோஷத்தைக்” கண்டான். இவன் சற்று வித்தியாசமாய் இருக்கும்படி தென்பட்ட ஏதோ ஒன்றைக் கண்டான். 75 கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்த ஏதோ ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுவே ஜனங்களை வித்தியாசமாகக் காணச் செய்கிறது. அவர்களே முழு உலகிலும் மிகவும் அழகான ஜனங்களாய் இருக்கின்றனர். அவன் தன்னுடையப் பிச்சைப் பாத்திரத்தை எடுத்து, அதை அவன் தள்ளி வைத்துவிட்டான். 76 மிகவும் வயோதிகனாயிருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு, “வெள்ளியும், பொன்னும் என்னிடத்திலில்லை” என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், “நீ இந்தக் கக்கத்தண்டுகளை வாங்கிக்கொள்ள என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. ஆனால் என்னிடத்தில் உள்ளதை நான் தருகிறேன்” என்பதாகும். இவன் தேனும் இரட்சிப்பின் திராட்சரசமான சந்தோஷத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இவன் பெந்தெகோஸ்தே நாளுக்குப் பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அங்கு வந்திருந்தான், அங்கே ஏதோக் காரியம் சம்பவித்திருந்தது. 77 அந்த வாலிப மனிதன் அதற்கு மகத்தான ஒரு பெரிய “ஆமென்” என்பதோடு துள்ளி, அவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்தான். 78 என்ன சம்பவித்தது? அந்த இரக்கத்தின் சங்கிலி, அதாவது, “நான் வியாதியஸ்தர்களின் மேல் மனதுருக்கமாயிருக்கிறேன்” என்று உரைத்தவரின் மனதுருக்கம், இந்த வயோதிக மீனவனுடைய இருதயத்தில் அதே ஆவியின் மனதுருக்கம் உண்டாயிருந்தது. எனவே அவன், “பணத்தைப் பொறுத்தமட்டில் என்னிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் லட்சக்கணக்கான மடங்கு அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு காரியத்தை நான் பெற்றிருக்கிறேன். அப்படிப்பட்டது என்னிடத்தில் உள்ளதே!” என்றான். 79 இப்பொழுது நினைவிருக்கட்டும், பேதுரு ஒரு யூதனாயிருந்தான். அவர்கள் இயற்கையாகவே பணத்தை விரும்புகிறவர்கள். ஆனால் இந்த யூதனோ மனமாற்றமடைந்திருந்தான். “என்னிடத்தில் உள்ள அப்பேற்பட்டதை நான் உனக்கு விற்கிறேன்” என்றல்ல. 80 “ஆனால் என்னிடத்தில் உள்ளதை நான் உனக்கு தருகிறனே! அப்பேற்பட்டது என்னிடத்தில் உள்ளதே. நான் என்னுடைய சட்டைப் பையில் ஒரு பைசா கூட வைத்திருக்கவில்லை. என்னால் ஒரு ரொட்டித்துண்டையும் வாங்க முடியாது. என்னால் எதையுமே வாங்க முடியாது. என்னிடத்தில் ஒரு பைசாகூட இல்லை. ஆனால் என்னிடத்தில் உள்ளதை, நீ அதைப் பெற்றுக் கொள்ள முடிந்தால், நான் உனக்குத் தருவேன். ஏனென்றால் அது எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.” அதுதான் நமக்குத் தேவை. “என்னிடத்தில் உள்ளதை நான் உனக்குத் தருகிறேன்.” “ஐயா, நீர் என்ன வைத்திருக்கிறீர்?” 81 “நான் விலையின்றி பாலும் தேனும் விற்கிறவரிடத்தில் இருந்து வருகிறேன். நான் அதை உனக்குத் தருவேன். நீ அதற்காக ஒன்றையும் எனக்குத் தரவேண்டியதில்லை. நீ அதை பெற்றுக்கொள்ளக்கூடுமானால் நான் அதை உனக்குத் தருவேன். கட்டணத்திற்கு வழங்கும் ஒருவரைப் போன்றில்லாமல், கட்டணமின்றி கொடுப்பவர்கள் போலவே.” 82 ஏனென்றால், “இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” அது வெறுமனே மூன்று நாட்களுக்கு முன்னால் அளிக்கப்பட்ட அவனுடைய கர்த்தரின் கட்டளையாயிருந்தது. “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; அவர்கள் சர்ப்பங்களை எடுத்தாலும், அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காது. நீங்கள் இலவசமாகப் பெற்றிருக்கிறபடியால், இலவசமாய் கொடுங்கள்.” அந்த யூதன் மனமாற்றமடைந்திருந்தான். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறைகள் தட்டுகிறார்.—ஆசி.] 83 அமெரிக்காவில் நமக்குத் தேவைப்படுகிறதென்னவென்றால், நம்முடைய மதச் சம்பந்தமான சடங்கு முறைகள் சிலவற்றின் ஸ்தானத்தை எடுக்கும் பரிசுத்த ஆவியின் மாற்றமேயாகும். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” 84 “என்னிடத்திலுள்ளதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட,” கலப்படமற்ற சிருஷ்டிகரின் நாமத்தில் உள்ள விசுவாசமாயிற்றே! அவன் குதித்தெழுந்து தேவனைத் துதித்தான் என்பதில் வியப்பொன்றுமில்லையே! 85 ஓ, அந்த மகத்தான காரியங்களை நீங்கள் அறிவீர்கள். அவன் ஒருக்கால் கக்கத்தண்டுகளை வாங்குவதற்கு போதுமான பணத்தைச் சேர்க்கும்படி முயற்சிக்க அங்கே நாற்பது வருடங்களாக அமர்ந்திருந்திருக்கலாம். ஆனாலும் அவனால் அதைச் செய்ய முடியாமற்போயிற்று. ஆனால் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படாதிருந்த இடத்தில், எதிர்பார்க்கபடாதிருந்த நேரத்தில், பெரும்பாலும் எதிர்பார்க்கப்படாமல், பற்றாக்குறையான ஜனங்களிடத்தில் சரியாக அவனுக்குத் தேவையாயிருந்ததை அவன் பெற்றுக்கொண்டான். தேவன் அதை அந்த வழியில் செய்கிறார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 86 ஒரு சிறுகூட்ட, பரிசுத்த உருளைகள் என்று அழைக்கப்பட்டவர்களிடத்தில் ஓர் இரவு எனக்குத் தேவையாயிருந்ததை நான் கண்டறிந்தேன். அதைப் பணத்திற்கு கொள்ள முடியாது. ஒரு கூட்ட எழுதப் படிக்கத் தெரியாத, கல்வியறிவற்ற, ஏழ்மையாக உடை உடுத்தியிருந்த ஜனங்களாயும், கறுப்பு நிறத்தவர்களாயுமிருந்தவர்கள் இருந்ததான அந்த இடத்தில், ஆரம்பத்தில் ஒரு பழைய மதுபானமருந்தும் கடையாயிருந்து, பின்பு திருத்தி சீரமைக்கப்பட்ட இடத்தின் தரையின் மீதே நான் ஒரு கிரயத்தை, சம்பத்தைக் கண்டடைந்தேன். அந்த வயோதிக கறுப்பு நிறத்தவர் என்னுடைய முகத்தை நோக்கிப் பார்த்து, “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?” என்று கேட்டபோது, ஓ, அதுவே எனக்குத் தேவையாயிருந்த ஒரு காரியமாயிருந்தது. அந்த ஜனங்களுக்கு மத்தியில் அதைக் கண்டறியும்படி நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் எனக்குத் தேவையாயிருந்ததை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். 87 இன்றைக்கு ஐ.நா. நாம் பெற்றுள்ளதை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அதுதான் அவர்களுக்குத் தேவை. குருஷேவ் இன்னும் மற்றுமுள்ள யாவருக்கும் கிறிஸ்து தேவை, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. அதுவே அவர்களுடைய மனநிலைகளை மாற்றும். அது அவர்களை மனிதர்களாக்கி, அவர்கள் வெறுக்கிறவர்களை சகோதரர்களாக்கும். அது பேராசையையும், மனக்காழ்ப்பையும், சண்டைச் சச்சரவையும் எடுத்துப்போட்டு, அன்பையும், சந்தோஷத்தையும், சமாதனத்தையும், நற்குணத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்தும். 88 ஆம், சில சமயங்களில் நீங்கள் எதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அதை அங்கே எதிர்பார்க்கப்படாத இடங்களில் கண்டறிகிறீர்கள். 89 இஸ்ரவேல் புத்திரருடைய உதடுகள் இரத்தம் கசிந்து கொண்டிருந்தபோதும், அவர்களுடைய நாவு அவர்களுடைய வாயிலிருந்து தொங்கிக் கொண்டுமிருந்தபோது, அவர்கள் என்னத்தை (எகிப்தின் எல்லாக் கொள்ளைகளையும்) கொடுத்திருந்திருப்பார்கள்? அவர்கள் நல்ல குளிர்ந்த குடி தண்ணீருக்காக எகிப்தியர்களிடத்தில் தாங்கள் கொள்ளையிட்ட எல்லா பொன்களையுமே கொடுத்திருந்திருப்பார்கள். வனாந்திரத்தில் அவர்களுடையத் தலைவர்கள், அவர்களை பாலைவனச் சோலையிலிருந்து பாலைவனச்சோலைக்கு, வாய்க்கால்களிலிருந்து நீரூற்றண்டைக்கு வழி நடத்தியிருந்தனர். ஆனால் அவைகள் யாவும் வறண்டு போயிருந்தன 90 அப்பொழுது அங்கே பணமுமின்றி, விலையுமின்றி உண்டானதே! சத்தமானது தீர்க்கதரிசியண்டை உரைத்து, “கன்மலையண்டை பேசு” என்று கூறினது. அது வனாந்திரத்தில் மிகவும் வறண்டிருந்த காரியமாயும், தண்ணீருக்கு மிகவும் தொலைவானதாயுமிருந்தது. அங்கே அவர்களுடைய தாகம் பணமுமின்றி விலையுமின்றி தணிக்கப்பட்டது. “கன்மலையண்டை பேசு.” கன்மலைக்கு கட்டணம் செலுத்து என்றில்லாமல் “கன்மலையண்டை பேசு” என்பதாயிருந்தது. 91 அவர் இன்றிரவும் அதே கன்மலையாயிருக்கிறார். அவர் ஒரு வறண்ட நிலத்தில் ஒரு கன்மலையாயிருக்கிறார். நீங்கள் அந்த வறண்ட நிலத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தால் அந்த கன்மலையண்டை பேசுங்கள். அவருக்கு கிரயம் செலுத்த வேண்டியதில்லை. அவரண்டைப் பேசுங்கள். அவரே ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையாயிருக்கிறார். நீங்கள் சுகவீனமாயிருந்தால் அந்தக் கன்மலையண்டைப் பேசுங்கள். நீங்கள் பாவ வியாதி கொண்டிருந்தால் கன்மலையண்டைப் பேசுங்கள். நீங்கள் சோர்ந்து போயிருந்தால், அந்த கன்மலையண்டைப் பேசுங்கள். 92 பாருங்கள், அது எங்கோ இருக்கும்…என்பதைப் போன்று அது காணப்பட்டது. நீரூற்றுகள் இருந்த அந்தச் சிறிய ஸ்தலங்களில் அங்கே தண்ணீர் இல்லாமலே இருந்தாலும், கன்மலையாயிருந்த அந்தப் பர்வதத்தின் மேல் தண்ணீர் இல்லாதது போல் கணப்பட்டது. மனிதன் நினைப்பதற்கு காலதாமதமாகவே தேவன் காரியங்களைச் செய்கிறார். அந்தக் கன்மலை வனாந்திரத்தில் மிகவும் வறண்ட ஸ்தலமாயிருந்தது. ஆனால் அவர், “கன்மலையண்டைப் பேசு” என்றார். 93 இன்றைக்கு ஜனங்கள் மிகவும் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்கள் சென்று தங்களுடைய ஜெபங்களைக் கூறி, அவர்களுக்காக ஒரு சில ஜெபங்களைக் கூறும்படியாக ஒரு பாதிரியாருக்கு கொஞ்சம் பணம் செலுத்தக்கூடுமானால், தங்கள் வழியினூடாக செலுத்தினால் நலமாயிருக்கும் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு பெரிய சபையைக் கட்டினால், ஒரு பெரிய பணக்கார மனிதன் அதற்கு ஆதரவளிக்க, அதே சமயத்தில் அவர் தொடர்ந்து இச்சையாகவே ஜீவித்துக் கொண்டிருக்க, அவருக்காக யாரவது ஒருவர் ஜெபிக்க வேண்டும். அவரும் அது அவ்வளவுதான் என்றே எண்ணிக் கொள்கிறார். தேவனுக்கு உங்களுடைய அசுத்தமான பணம் தேவைப்படுகிறதில்லை. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தின் மேல் மூன்று முறைகள் தட்டுகிறார்.—ஆசி.] அவர் விரும்புகிற காரியமெல்லாம் உங்களுடைய பக்தியும், அவரண்டைப் பேசும்படியான உங்களுடைய ஜீவியமுமேயாகும். தேவன் உங்களுக்குப் பணத்தை அளித்திருக்கிறார். அதைத் திருப்தி செய்யாதப் பொருள்களுக்காகச் செலவழிக்காதீர்கள். திருப்தி செய்கிற பொருள்களுக்காக அதைச் செலவு செய்யுங்கள். ஆனால் உண்மையான பரிசுத்தமாகுதலைக் கொண்டுவரும்படியாக நீங்கள் அந்தக் கன்மலையண்டைப் பேசும் வரையில் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவே முடியாது. 94 அவர் பணமுமின்றி, விலையுமின்றி ஜீவனையளிக்கும் தண்ணீரைக் கொண்டு வந்தார். அவர்கள் குடித்து, அவர்களுடைய ஒட்டகங்களும் குடித்து, அவர்களுடைய பிள்ளைகளும் குடித்தபோதும் அது இன்னமும் வனாந்திரத்தில் தண்ணீர் பாய்ந்தோடும் ஒரு ஊற்றாகவே இருந்தது. 95 ஆகையால் அவர் இன்றைக்கும் இந்த விடாய்த்த பூமியில் அழிந்து போகும் ஜனங்களுக்கான கன்மலையாயிருக்கிறார். “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடைவான்.” 96 கவனியுங்கள். ஒவ்வொரு இரவும் அவர்கள் அப்பத்தைக் குறித்து எதிர்பார்க்க வேண்டியதாயிருக்கவில்லை. அவர்களுடைய அப்பம் ஒவ்வொரு இரவும் அவர்களண்டைக்குப் புத்தம் புதியதாக கொண்டுவரப்பட்டது. 97 இன்றைக்கு நாம் ஒரு துண்டு அப்பத்தைப் பெற புறப்பட்டுச் செல்கிறோம். நீங்கள் ஒரு பிச்சைக்காரனாயிருந்து, இங்குள்ள கடையண்டைக்கு நடந்து சென்று, “நான் ஒரு துண்டு அப்பத்தைப் பெற்றுக் கொள்ள வாஞ்சையாயுள்ளேன்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். 98 அப்பொழுது அவன், “உன்னுடைய பணத்தை எனக்குக் காண்பி” என்பான். எனவே நான் இந்த துண்டு அப்பத்தற்காகவே இருபத்தைந்து செண்டுகள் பணம் வைத்திருக்க வேண்டும். 99 நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்போது, எதை நீங்கள் பெற்றுக் கொண்டுவிடுகிறீர்கள்? இது ஒரு சிறிதளவைக் கொண்ட உணவாய் இருக்கிறது. ஆனால் கோதுமை உற்பத்தி செய்யக் கூடிய மிக தரக்குறைவானதை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அவர்களோ அதிலிருந்து எல்லா ஊட்டச் சத்துக்களையும், எல்லாத் தவிட்டையும் எடுத்து அதைப் பன்றிக்குக் கொடுக்கிறார்கள். அந்த தவிட்டோடுச் சேர்ந்து ஒட்டிக் கொண்டிருப்பதோடு பசைப் போன்ற மாவினைக் கலந்து அதைச் சலித்தெடுத்து ஒரு ரொட்டித் துண்டைத் தயாரிக்கிறார்கள். அது பல முறைகள் அழுக்கும், அசுத்தமும் கொண்டக் கரங்களினால் தயாரிக்கப்படுகிறது. உங்களுடைய ரொட்டியில் நீங்கள் கண்டடைவது என்னவென்றால், சில நேரங்களில் தலை முடிகளின் ஒரு கொத்தும், ஒழுக்கக்கேடான பொருள்களும் உறையிடப்படும் காகிதத்துண்டுகள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் அந்த ரொட்டி தயாரிக்குமிடத்தில் விழுவதை நீங்கள் காணலாம். பால்வினை நோய் கொண்ட பாவமுள்ள ஜனங்கள் மற்றும் ஒவ்வொரு காரியமும் அதற்குள் கலக்கின்றன. அது தயாரிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்களேயானால், நீங்கள் அதைச் சாப்பிடக்கூடமாட்டீர்கள். ஆனால் அதே சமயத்தில் நீங்கள் உங்களுடைய இருபத்தைந்து செண்டுகள் பணத்தை செலுத்துகிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்கிறதில்லை. 100 தேவனோ பணமுமின்றி, விலையுமின்றி தூதர்களின் கரங்களினால் செய்யப்பட்ட அப்பத்தைக் கொண்டு ஒவ்வொரு இரவும் அவர்களைப் போஷித்தார். இன்றைக்கோ அந்த அப்பமானது கிறிஸ்துவை சுட்டிக் காட்டுகிறதாயும், ஆவிக்குரியப் பிரகாரமான ஜீவனாயும், அவருடைய ஜீவனை அளிக்கும்படியாக வானத்திலிருந்து இறங்கி வந்ததுமாயிருக்கிறது. 101 தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறார். அவர்கள் அந்த அப்பத்தை அடுத்த நாளுக்கென்று எடுத்து வைத்துக் கொண்டதால், அது கெட்டுப் போய்விட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 102 நீங்கள் யாரோ ஒருவர், “பாருங்கள், நான் பெற்றுள்ளேன்…நான் உங்களுக்குச் சொல்வேன், நான் ஒரு லூத்தரன், நான் ஒரு பிரஸ்பிடேரியன், பாப்டிஸ்டு, பெந்தெகோஸ்துக்காரன்” என்பதைப் பற்றி சொல்வதைக் கேட்கிறீர்கள். அது வெறுமனே கையால் செய்யப்பட்ட ஒரு பழைய ரொட்டித் துண்டாகும். அதில் உள்ளதெல்லாம் வெறுமெனே அசுத்தமாயும், மனிதருடைய கரங்களினால் உண்டாக்கப்பட்டதுமானதாயுள்ளது. 103 ஆனால் நீங்கள், “இந்தக் காலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் என்னுடைய ஆத்துமாவைப் புத்தம் புதியதாய் அபிஷேகித்தார்” என்ற ஒரு சாட்சியின் அனுபவத்தைப் புதியதாக கேட்கும்போது, ஓ, சகோதரனே, அது தூதர்களின் ஆகாரமாயிருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் பரலோகத்திலிருந்து அவர்களைப் புதியதாக போஷிக்கிறார். ஆசீர்வதமான மழையே நமக்குத் தேவை இரக்கத்தின் துளிகள் நம்மைச் சுற்றிலும் விழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாமோ மழைக்காகவே மன்றாடுகிறோம். 104 ஓ, ஆம் கர்த்தாவே, ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவைப் புதியதாக பரலோகத்திலிருந்து அனுப்பும். அதை என்னுடைய இருதயத்திற்குள்ளாக விழவிட்டு, அவருடைய மகத்தான பிரசன்னத்தை நான் அனுபவித்து மகிழ்வேனாக. 105 அவர்கள் நிச்சயமாகவே நன்றியுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் நன்றியறிதலுள்ளவர்களாயிருந்தனர். தேவனுடைய ஆவியினால் பிறந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிற எந்த மனிதனோ அல்லது ஸ்திரீயோ எப்பொழுதுமே நன்றியுள்ளவர்களாயிருப்பார்கள். என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல், நீங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்பீர்கள். 106 மலையின் மீது பிறந்து, குருட்டுப் பையனாய் இருந்த சிறுவன் பென்னியைப்போன்றே. சுமார் எட்டு மாத குழந்தையாயிருந்தபோதே அவனுடைய கண்களில் கண்படலங்கள் வளரத்துவங்கிவிட்டன. அவனுடைய பெற்றோர்களோ ஏழ்மையானவர்களாயிருந்தனர். அவர்கள் பண்டைய மண்மேடான குன்றின் பக்கத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அந்த அறுவை சிகிச்சை மாத்திரமே சிறுவன் பென்னியினுடைய கண்களை காப்பாற்ற முடியும் என்றும், அதினால் மட்டும் அவனால் காணமுடியும் என்றும் அறிந்திருந்தனர். அவனோ அப்பொழுது சுமார் பன்னிரண்டு வயது நிரம்பிய பையனாகிவிட்டிருந்தான். அவனுடைய பெற்றோர்களால் வருடத்திற்கான அவர்களுடைய அப்பத்திற்கும், இறைச்சிக்கும் போதுமான பணத்தையே சம்பாதிக்க முடிந்தது. எனவே அவர்களால் அந்த அறுவை சிகிச்சைக்கு செலவிட முடியவில்லை. 107 அப்பொழுது அக்கம்பக்கத்தில் உள்ள யாவரும் சிறுவன் பென்னி குருடனாகவே அங்குள்ள சிறுபிள்ளைகளிடம் விளையாட முயற்சிப்பதைக் கண்டனர். அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதையே அவனால் காணமுடியாதிருந்தது. எனவே அவர்கள் வருத்தப்பட்டனர். ஆகையால் அவர்கள் ஒவ்வொருவரும் அந்த வருடம் சற்று கூடுதலாகவே பயிரிட்டனர். அவர்கள் வெயிலில் சற்று கடினமாக உழைத்தனர். பின்னர் இலையுதிர் காலத்தில் விளைச்சல் விற்கப்பட்டபோது, அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு சிறுவன் பென்னியை இரயிலில் ஏற்றி மருத்துவரிடம் அனுப்பினர். 108 அவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தினர். அந்தச் சிறுவன் பென்னி திரும்புகையில், அவன் இரயிலில் இருந்து இறங்கினபோது, அக்கம்பக்கத்தினர் யாவரும் சுற்றிலுமாய் திரண்டு கூடிவிட்டனர். அப்பொழுது அவனுடைய சிறிய பிரகாசமான கண்கள் மின்னின. அவன் அவர்களுடைய முகங்களை நோக்கிப் பார்த்தபோது, அவன் கூச்சலிட்டு கதறத் துவங்கினான். 109 அப்பொழுது நடத்துனர்களில் ஒருவர், “மகனே, அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன கிரயமாயிற்று?” என்று கேட்டார். 110 அதற்கு அவனோ, “திருவாளரே, இந்த ஜனங்கள் என்ன கிரய மதிப்புடையவர்கள் என்பது எனக்குத் தெரியாது., ஆனால் அந்தக் கிரயத்தைச் செலுத்தின அவர்களுடைய முகங்களை என்னால் காணமுடிகிறது என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றான். 111 அந்தவிதமாகத்தான் நாம் உணருகிறோம். தேவனுக்கு என்ன கிரயம் என்று எனக்குத் தெரியாது. அவருக்கு மிகச் சிறந்ததாயிருந்த அவருடைய குமாரனை அவர் எனக்கு அளித்தார் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் எனக்காக மரித்தார் என்பதை அறிந்து கொள்ளவும், அவருடைய முகத்தை நோக்கிப் பார்க்க முடிந்த இந்த ஆவிக்குரிய பார்வையைப் பெற்றுக் கொண்டதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவருக்கு என்ன கிரயம் என்று எனக்குத் தெரியாது. அதை மதிப்பிட நமக்கு எந்த வழியுமே கிடையாது. கிரயமோ மிகவும் மகத்தானதாயிருக்கிறது. அது எவ்வளவு என்று என்னால் உங்களுக்குக் கூற முடியவில்லை. ஆனால் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேன். அதாவது நான் ஒரு காலத்தில் குருடனாயிருந்தேன். இப்பொழுதோ என்னால் காண முடிகிறது. 112 இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மேயோ சகோதரர்கள் என்னுடைய காலம் முடிந்துவிட்டது என்றும், இனி ஒருபோதும் என்னால் ஜீவிக்க முடியாது என்றும் என்னிடம் கூறினபோதும், நான் இன்றைக்கும் உயிரோடிருக்கிறேன். நான் அதற்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவனுக்கு என்ன கிரயம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உயிரோடிருக்கிறேன் என்பதற்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 113 நான் ஒரு காலத்தில் ஒரு பாவியாய், பாவத்தில் கட்டப்பட்டு, மரண திகிலுண்டாக்குகிற இருதய வேதனையோடு இருந்தேன். ஆனால் இன்றைக்கோ மரணம் என்னுடைய ஜெயமாயிருக்கிறது. அல்லேலூயா! அது நான் நேசிப்பவருடைய முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடிய அவருடைய பிரசன்னத்திற்கு மாத்திரமே என்னைக் கொண்டு வரும். அவர் அறுவை சிகிச்சையினால் காரியத்தை மாற்றினார். அவர் என்னுடைய இருதயத்தை எடுத்து, அதைப் புதியதாக்கினார். ஏதோக் காரியம் எனக்கு சம்பவித்ததை நான் அறிவேன். 114 கடந்த இலையுதிர் காலத்தின்போது, மினிஸோட்டாவில் ஒரு செய்தித்தாளில் வெளி வந்தது. ஒரு நாள் காலையில் ஒரு சிறு பையன் தன்னுடைய இரு சக்கர மிதி வண்டியை எடுத்துக் கொண்டு, ஞாயிறு வேதபாட பள்ளிக்காகச் சபைக்குச் சென்றானாம். பக்கத்தில் வசித்த மற்றொரு வாலிப மனிதனோ, அவன் ஞாயிறு வேதபாடப்பள்ளியோடு எவ்வித ஈடுபாடும் கொண்டிருக்கவில்லை. எனவே அவன் தன்னுடைய பெண் சினேகிதியை அழைத்துக்கொண்டு, சறுக்கி விளையாடச் சென்றானாம். அந்த மனிதன் நன்கு வளர்ந்த புருஷனாயிருந்தான். அப்பொழுது அவன் மெல்லிய பனிக்கட்டிக்குள் வழுக்கி விழுந்தான். அப்பொழுது அவன் அன்று காலைதான் அந்தச் சிறுபையன் வீதியில் சென்றபோது, அவனைப் பார்த்து நகைத்து, தன்னுடைய பெண் சினேகிதியினிடத்தில், “அது அந்தச் சபைக்குச் செல்கிற ஒரு கூட்ட மதவெறியர்கள்” என்று கூறியிருந்தானாம். அவன் பனிகட்டியினூடாகச் சென்று விழுந்தபோது, அவனுடைய பெண் சினேகிதியோ அவனிடத்திலிருந்து தூரமாய் இருந்தாள். அவளோ அவனைப் பார்க்கிலும் எடை குறைந்தவளாய் இருந்தாள். எனவே அவள் தப்பித்துக் கொண்டாள். ஆனால் அவன் எழும்பித் தன்னுடையக் கரங்களைப் பனிக்கட்டியின் மேல் வைத்தபோது, அவன் செயலற்ற நிலைமைக்குள்ளாக்கப்பட்டு, பனிக்கட்டியின் மீது ஒட்டிக் கொண்டான். 115 அப்பொழுது அவனுடைய பெண் சினேகிதி அவனண்டைக்குச் செல்ல முயன்றாள். ஆனால் அவள் மிகவும் பருமனானவளாக இருந்தாள். எனவே அவள் பனிக்கட்டியை உடைத்துவிட்டாள். அப்பொழுது அவன் அவளை நோக்கி, “திரும்பிப்போ, நீ திரும்பிப் போய்விடு. நீயும் உள்ளே விழுந்து விடுவாய். நாம் இருவருமே மூழ்கிவிடுவோம்” என்று கூச்சலிட்டான். அவன் கதறினான். ஆயினும் அவனுக்கு உதவும்படிக்கு ஒன்றுமே இல்லாதிருந்தது. 116 கொஞ்ச நேரங்கழித்து குன்றின் உச்சியிலிருந்து ஒரு சிறிய இரு சக்கர மிதிவண்டி வந்தது. ஒரு சிறுபையன் தன்னுடைய கரத்தின் கீழே ஒரு வேதாகமத்தை வைத்துக் கொண்டு, அந்த இரு சக்கர மிதிவண்டியை மிதித்துக் கொண்டு வந்தான். அப்பொழுது அவன் கூக்குரல்களைக் கேட்டான். உடனே அவன் தன்னுடைய சிறு இரு சக்கர மிதிவண்டியை வேகமாக மிதித்து ஓட்டி வந்தான். பின்னர் தன்னுடைய வேதாகமத்தை கீழே வைத்துவிட்டு, அந்தப் பனிக்கட்டியின் மீது ஓடினான். தன்னுடைய நல்ல ஆடைகளோடு, தன்னுடைய சிறிய வயிற்றினால் ஊர்ந்து சென்று, அந்த மனிதனுடையக் கரங்களை அவன் பற்றிப்பிடித்து, அவனை திரும்ப இழுத்துக் கொண்டு, அந்தப் பனிக்கட்டியிலிருந்து அவனை வெளியே கொண்டுவரும்படியாய்ச் சென்றான். பின்னர் வெளியே ஓடிச் சென்று ஒரு காருக்கு கொடியசைத்துக் காட்டி நிறுத்தினான். அப்பொழுது அவர்கள் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் விரைவு வாகனத்தை அழைத்து, அவனை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 117 அவன் அங்கு சென்று, அந்த நோயாளிகளை ஏற்றிச் செல்லும் விரைவு வாகனத்திற்கு பணத்தை செலுத்திவிட்டு, அவன் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்த சிகிச்சைக் காரியங்களுக்கும், சளிக் காய்ச்சலுக்கான ஊசிகளுக்காக மருத்துவர்களுக்கு கட்டணத்தைச் செலுத்தினப் பிறகு, அவன் இந்தச் சிறு பையண்டை வந்தான். அப்பொழுது அவன், “மகனே, நான் உனக்கு என்ன கடன் பட்டிருக்கிறேன்?” என்று கேட்டான். அதற்கு அவனோ, “ஒன்றுமில்லையே” என்றான். 118 பின்னர், அவன் “நான் உனக்கு என்னுடைய ஜீவனைக் கடனாக அளித்துள்ளேன்” என்றான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பணம் அதை செலுத்த முடியவில்லை. அது அவனுடைய ஜீவனாய் இருந்தது. 119 நாம் தேவனைப் பொறுத்தவரையில் அந்தவிதமாகத் தான் உணர வேண்டும். நம்முடைய வழியினூடாக ஏதோ ஒன்றினைக் கொண்டு கொள்ளும்படியாயில்லாமல், நாம் நம்முடைய ஜீவியத்தைத் தேவனுக்கு அளிக்க கடமைப்பட்டுள்ளோம். பாவத்தின் சாக்கடைக்குழியில் மரித்துக் கொண்டும், மூழ்கிக் கொண்டுமிருந்தோம். தேவனோ தம்முடைய கரங்களை நீட்டி தூக்கியெடுத்து எனக்கு வஸ்திரமுடுத்தினார். நான் பாவத்தில் ஆழ்ந்து மூழ்கிக் கொண்டிருந்தேன், அமைதியானக் கரையிலிருந்து தூரமாயிருந்தேன், உள்ளுக்குள்ளாக மீளமுடியாத அளவிற்கு கறைப்பட்டு, இனி ஒருபோதும் எழும்ப முடியாதபடிக்கு மூழ்கிக் கொண்டிருந்தேன்; ஆனால் சமுத்திரத்தின் எஜமானோ, முற்றிலும் நம்பிக்கையிழந்த என் கூக்குரலைக் கேட்டு, ஜலத்தினின்று என்னைத் தூக்கிவிட்டார், இப்பொழுதோ நான் பாதுகாவலாயிருக்கிறேன். 120 நான் என்னுடைய ஜீவியத்தை அவருக்கு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் உங்களுடைய ஜீவியத்தை அவருக்கு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அவரைச் சேவிக்கும்படியாய் உங்களுடைய ஜீவியத்தை அவருக்கு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சபை ஸ்தாபனத்தைப் பற்றிப் பெருமையாக பேசிக்கொண்டே நடந்து கொண்டிருக்கும்படிக்கு அதை அளிப்பது அல்ல; அங்குமிங்கும் சுற்றித்திரிந்து மற்றவர்களை விமரிசனம் செய்வதற்கு அல்ல; ஆனால் சேவை செய்யும்படி முயற்சிக்கவும், மற்றவர்களை இரட்சிக்கும்படியாகவும், அவர்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அறிவிற்கு கொண்டு வருவதற்காகவுமேயாகும். 121 கெட்ட குமாரன். முடிக்கையில் நான் இதை கூறுவேனாக. அவன் தன்னுடைய ஆஸ்தியனைத்தையும், தகப்பனுடைய ஆஸ்தியையும் ஒழுக்கங்கெட்ட ஜீவியத்தினால் வீணடித்தபின்பு, அவன் வீட்டிற்கு…திரும்பிக் கொண்டிருந்தான். அவன் பன்றிப் பட்டியில் கிடந்தபோது அவனுக்குப் புத்தி தெளிந்தது. அப்பொழுது அவன், “என் தகப்பனார் எத்தனையோ கூலிக்காரர்களையும், அவர்களுக்குத் தேவையானதையும் போதுமானதற்கு மேல் பூரித்தியாய் வைத்திருக்கிறார், நானோ இங்கே வறுமையினால் மரித்துக் கொண்டிருக்கிறேனே” என்றான். ஆனால் அப்படியில்லாமல் அவன், “நான் கொஞ்சமாவது பணத்தை வைத்திருந்தால், நான் செலவழித்து கரைத்ததற்காக என் தகப்பனாருக்குத் திரும்ப பணம் கொடுக்கக்கூடுமே” என்று கூற முயற்சித்திருந்தால் என்னவாயிருந்திருக்கும்? ஆனால் அவனோ தன்னுடைய தகப்பனாரின் சுபாவத்தை அறிந்திருந்தான். எனவே அவன், “நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குச் செல்வேன்” என்றான். 122 தகப்பனோ ஒருபோதும், “மகனே! ஒரு நிமிடம் பொறு. நீ என்னுடைய பணத்தைத் திரும்பக் கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்கவேயில்லை. இல்லை. அவன் ஒருபோதும் இவனுடைய பாவங்களுக்காகக் குற்றப்படுத்தவுமில்லை. இவன் திரும்பி வந்து கொண்டிருந்ததற்காக அவன் மகிழ்ச்சியாயிருந்தான். அவனுக்கு புத்தி தெளிந்திருந்தது என்பதற்கு அவன் மகிழ்ச்சியாயிருந்தான். ஏனென்றால் அவன் தன் குமாரனாயிருந்தான். அவன் தன்னுடைய சொந்தப் பிள்ளையாயிருந்தான். அவன் தன்னுடைய வீட்டிற்காக் வரும் பாதையில் இருந்ததற்காக அவன் மகிழ்ச்சியடைந்திருந்தான். இப்பொழுதோ அவன் இவனுடைய பாவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அவன் புத்தித் தெளிந்து, “நான் தேவனுக்கு முன்பாகவும், என் தகப்பனுக்கு முன்பாகவும் பாவம் செய்திருக்கிறேன், எனவே நான் எழுந்து, அவரண்டை செல்வேன்” என்று கூறினதற்கு அவன் மகிழ்ச்சியாயிருந்தான். 123 அவன் தூரத்தில் இவனைக் கண்டபோது, அவன் இவனண்டைக்கு ஓடி, இவனை முத்தம் செய்தான். பின்னர் அவன், “பணமின்றி, கொழுத்தக் கன்றை அடியுங்கள்.” பணமின்றி, “உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வாருங்கள்.” பணமின்றி, “மோதிரத்தையும் கொண்டு வந்து,” “அதை இவனுடைய விரலில் போடுங்கள். நாம் புசித்து, குடித்து, சந்தோஷமாயிருப்போம். ஏனென்றால், இந்த என் குமாரன் காணமற்போனான், இப்பொழுதோ திரும்பவும் காணப்பட்டான். இவன் மரித்தான், இவன் திரும்பவும் உயிர்த்தான். அதைக் குறித்து நாம் மகிழ்ச்சியாயிருப்போமாக” என்றான். 124 நண்பர்களே, முடிக்கையில் நான் இதைக் கூறுவேனாக. திருப்தியாக்குகிற காரியங்கள் மட்டுமே, உண்மையாயிருக்கிற காரியங்கள் மட்டுமே, நன்மையாயிருக்கிற காரியங்களை மட்டுமே பணத்தினால் கொள்ள முடியாது. அவைகள் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டான கிருபை வரங்களாயிருக்கின்றன்; ஆத்தும இரட்சிப்பு, சந்தோஷம், வந்து புசித்து திருப்தியடையுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 125 நீடித்திருக்கிற காரியங்கள் யாவும், நன்மையாயிருக்கிற காரியங்கள் யாவும், மகிழ்ச்சிதரும் காரியங்கள் யாவும், நித்தியமான காரியங்கள் யாவுமே இலவசனமானதாயும், உங்களுக்குக் கிரயமேயில்லாததுமாயிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் எழுத்துகளின் முடிவில், “விருப்பமுள்ளவன் வந்து, பணமுமின்றி விலையுமின்றி ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாய்ப் பருகக்கடவன்” என்று கூறப்பட்டுள்ளது. இலவசமாய் திருப்தியாக்குகிற உண்மையான காரியங்கள் உங்களாலே பாதுகாக்கப்படாமல் கடந்து செல்ல அனுமதித்துவிட்டு, திருப்தியாக்காதவைகளுக்காக நீங்கள் ஏன் உங்களுடைய பணத்தை செலவழிக்கிறீர்கள்? நாம் ஜெபம் செய்வோமாக. 126 நீங்கள் அமைதியாயிருக்கையில் ஜெபத்தில் இருங்கள். இந்தக் கட்டிடத்தில் இக்காலையில் அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் பருகாதவர்கள் எவரேனும் இருந்தால், இன்னமும் உங்களுடைய ஜீவியத்தில் உலகத்தின் வாஞ்சைகளைக் கொண்டிருந்தால், இக்காலையில் நீங்கள் உங்களுடைய பானம்பண்ணும் ஸ்தலத்தை மாற்ற விரும்புகிறீர்களா? இல்லையென்றால் உங்களுடைய பணத்தின் அநியாய வட்டியை மாற்ற விரும்புகிறீர்களா? நீங்கள் (பணமுமின்றி, விலையுமின்றி) தேவனிடத்திலிருந்து தேனையும், பாலையும் சந்தோஷமானத் திராட்சரத்தையும் வந்து வாங்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் ஜெபிக்கையில் என்னை நினைவுகூறும்” என்று கூறுவீர்களா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் ஜெபிக்கையில் என்னை நினைவுகூருங்கள்” என்று கூறுபவர்கள் இருக்கின்றீர்களா? 127 வாலிப ஜனங்களாகிய உங்களில் சிலர், ஆம், உங்களுடைய ஆஸ்தியை வீண்டித்திருக்கிறீர்கள். உங்களுக்காக தாயானவள் ஜெபத்தில் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தாள். தகப்பனார் உங்களுக்கு எல்ல போதனைகளையும் செய்திருக்கிறார். அதே சமயத்தில் நீங்கள் பிசாசின் முறுமுறுப்பிற்கு செவி கொடுக்கும்படி அதை ஒருபுறமாக ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். இப்பொழுதோ நீங்கள் உலகத்தின் இசையையும், உலகத்தின் காரியங்களையும் வாஞ்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். கெட்ட குமாரன் பன்றிப்பட்டியில் புத்தி தெளிவடைந்ததுபோல, நீங்களும் புத்தி தெளிவடைந்து கொண்டிருக்கிறீர்கள். சகோதரனே, சகோதரியே, நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, என்னை நினைவு கூரும், இக்காலையில் எனக்குப் புத்தி தெளிவுண்டாக்கி, என்னைப் பிதாவினுடைய வீட்டிற்கு வரும்படி செய்வீரா?” என்று கூறுங்கள். அது உங்களிடத்தில் ஒரு காரியத்தையும் கிரயமாகக் கேட்கிறதில்லை. அவர் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதேயில்லை, “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” தெய்வீக பிரசன்னத்தில் உள்ள அவர்கள் தங்களுடையக் கரத்தை உயர்த்துவார்களா? 128 சுகவீனமாயும், தேவையுள்ளவர்களுமாயிருக்கிறவர்கள், “நான்—நான் ஒரு பள்ளத்தாக்கிற்குள்ளாக விழுந்துவிட்டேன். சாத்தானோ எனக்குத் தீங்கிழைத்திருக்கிறான். அவன் என்னை முடமாக்கியிருக்கிறான், என்னை சுகவீனமாக்கியிருக்கிறான் அல்லது ஏதோ காரியத்தைச் செய்திருக்கிறான். இக்காலையில் தேவனுடைய விசுவாசச் சங்கிலியானது என்னுடைய இருதயத்திற்குள்ளாகச் செயல்படத் தொடங்கி, அலங்கார வாசலண்டையில் இருந்த மனிதனுக்குச் செய்யப்பட்டதுபோல, என்னையும் இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து மேலே இழுக்கும்படிக்கு நான் வாஞ்சிக்கிறேன்” என்று கூறுங்கள். உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள், தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. 129 கர்த்தாவே, இந்த வேளையில் தங்களுடையக் கரங்களை உயர்த்துகிறவர்களை அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக நான் உம்மண்டைக் கொண்டு வருகிறேன். நீரே தேவன், நீர் மாத்திரமே தேவனாயிருக்கிறீர். இப்பொழுது அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிற இடத்தில், அங்கேயே நீர் அவர்களிடத்தில் பேசினீர். அங்கேயே நீர் அவர்கள் தவறாயிருந்தனர் என்பதை அவர்கள் நம்பும்படிச் செய்தீர். வார்த்தையானது அதனுடைய ஸ்தானத்தைக் கண்டறியும்போது, பரிசுத்த ஆவியானவர் பேசத் துவங்கி, “நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். திரும்புங்கள், பிதாவாகிய தேவனண்டைக்கு மீண்டும் வாருங்கள்” என்கிறார். அவர்கள் இந்தப் பூமிக்குரிய பன்றிப்பட்டியிலிருந்து வெளியேறி, பூரணமாய் இருக்கிற பிதாவினுடைய வீட்டிற்கு வரும்படி விரும்பினர் என்பதைக் காண்பிக்கும்படியாகவே அவர்கள் தங்களுடையக் கரங்களை உயர்த்தினர். அங்கே அவர்கள் எதையுமே கொண்டுவர வேண்டியதாயிராது. புலவன் நன்றாய் கூறியுள்ளதுபோன்றே, “நான் என்னுடையக் கரங்களில் கொண்டுவர ஒன்றுமேயில்லை. அப்படியே எளிமையாய் நான் உம்முடைய சிலுவையை பற்றிக் கொள்கிறேன்.” அவர்கள் இனிமையாயும், தாழ்மையாயும், குற்றத்தை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டவர்களாக வந்துத் தங்களுடைய ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பார்களாக. நீரோ அவர்களுக்கு உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வருவீர்; ஒரு மோதிரத்தை அவர்களுடைய விரல்களில் போடுவீர்; அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருடைய மன்னாவினால் அவர்களைப் போஷிப்பீர். கர்த்தாவே, அதை அருளும். 130 அவர்கள் சுகவீனமானவர்களாயும், துன்பப்படுகிறவர்களுமாய் இருக்கின்றனர். அவர்கள் தேவையுள்ளவர்களாயிருக்கின்றனர். சாத்தான் அவர்களை ஒரு பள்ளத்திற்குள்ளாக வீசியிருக்கிறான் என்பதில் சந்தேகமேயில்லை. அறுவை சிகிச்சைக்கான பணம் பற்றாக்குறையாக உள்ளது. அவர்களில் அனேகருக்கு ஒருக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட முடியாமலிருக்கலாம் என்பதில் சந்தேகமேயில்லை. அவன் மிக அதிகப்படியான பணத்தை வைத்திருந்தாலும்கூட, வைத்தியரால் ஒருக்கால் அந்தக் காரியத்தை அகற்ற முடியாமலிருக்கலாம். ஆனால் நீரோ தேவனாயிருக்கிறீர். இப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் அமர்ந்துள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் இந்த மணி வேளையிலேயே சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய தலையில் இருந்து அவர்களுடைய பாதம் வரையிலும் முழுமையாய் சுகமாக்கப்படுவார்களாக. 131 அவர்கள் சந்தோஷமில்லாமல் இருப்பார்களாயின், அவர்களுடைய இரட்சிப்பை, அவர்கள் அதை இனி ஒருபோதும் அனுபவித்து மகிழ முடியாமலிருந்தால், பண்டைய தாவீது “என்னுடைய இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தாரும்” என்று கூறினது போன்றே தாருமே. நீர் விடாய்த்த பூமியில் கன்மலையாயிருக்கிறபடியால், அவர்களுடைய துக்கத்திற்காகவும், விடாய்ப்பிற்காகவும் அவர்கள் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்வார்களாக. நீரே பெருவெள்ள நேரத்தில் அடைக்கலமாயிருக்கிறீர். பிசாசு ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு ஏவுகணையையும் அவர்களண்டை வீசியெறிந்து கொண்டிருக்கும் போது, நீரே பெருவெள்ள நேரத்தில் அடைக்கலமாயிருக்கிறீர். தேவனே, அது அவ்வண்ணமாகவே இன்றைக்கும் இருப்பதாக. ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். மென்மையாயும், மென்கனிவாயும் இயேசு அழைத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்காகவும் எனக்காகவும் அழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் பாவம் செய்திருக்கிறபோதிலும், அவர் இரக்கத்தையும், மன்னிப்பையும் உடையவராயிருக்கிறார். உனக்காகவும், எனக்காகவும் மன்னிப்பை உடையவராயிருக்கிறார். வீட்டிற்கு…வாராயோ… 132 இப்பொழுது நீங்கள் பீடத்தண்டை வந்து, முழங்காற்படியிட வாஞ்சிப்பீர்களேயானால், உங்களை அபிஷேகிக்கும்படியாக நாங்கள் உங்களோடு ஜெபித்து, எங்களால் செய்ய முடிந்த எந்தக் காரியத்தையும் செய்வோம். நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். …விடாய்த்து…வீட்டிற்கு வாராயோ; மனப்பூர்வமாயும், மென்கனிவாயும் இயேசு அழைத்துக் கொண்டிருக்கிறார். ஓ, பாவியே, வீட்டிற்கு வாராயோ என்றே அழைக்கிறாரே! 133 நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா? டெடி, நீங்கள் “நான் அவரை நேசிக்கிறேன், அவர் முதலில் என்னிடத்தில் அன்பு கூர்ந்தக் காரணத்தால், நான் அவரை நேசிக்கிறேன்” என்றப் பாடலுக்கு ஒரு சுருதியைக் கொடுக்கக்கூடுமா? நீங்கள் அதை வாசிக்கக்கூடுமா? 134 நாம் அப்படியே ஒரு நிமிடம் ஆராதனையில் ஒழுங்கு முறையை மாற்றுவதற்கு முன்பு, நாம் அவருடைய மகிமைக்கென்று இதைப் பாடுவோமாக. இது ஆராதனையாயுள்ளது. செய்தியானது முடிவுற்றிருக்கிறது. நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அதை பேசும்படி அது எனக்கு நன்மை செய்தபடியால், அது உங்களுக்கும் நன்மை செய்ய வேண்டுமென்றே ஜெபிக்கிறேன். அதை உங்களிடத்தில் பேசும்படியாக எனக்கு அளிக்கப்பட்டிருந்த அதே ஆவியின் ஏவுதலின் மூலமாக, நீங்கள் அதை அனுப்பப்பட்டிருந்த அந்த அதே ஆவியின் ஏவுதலோடு பெற்றுக் கொண்டீர்கள் என்பதற்காக நான் ஜெபிக்கிறேன். கர்த்தர் அதை உங்களுடைய இருதயத்திற்கு ஆசீர்வாதமாக்குவாராக. சரி. நான் அவரை நேசிக்கிறேன். இப்பொழுது நாம் பாடுகையில், உங்களுடையக் கண்களை சற்று மூடிக்கொள்ளுங்கள். நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்னுடைய இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 135 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை சற்றுத் தாழ்த்தி அதை வாய்திறவாமல் மெளனமாய்ப் பாடுவோமாக [சகோதரன் பிரான்ஹாம் நான் அவரை நேசிக்கிறேன் என்றப் பாடலை வாய்திறவாமல் மெளனமாய் பாடத் துவங்குகிறார்—ஆசி.] நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் உங்களுடைய இருதயத்திற்கு உண்மையாயிருக்கவில்லையா? அவரைக் குறித்த காரியம் அவ்வளவு உண்மையானதல்லவா? அவர் என்னை முதலில் நேசித்த காரணத்தால் நான் அவரை நேசிக்கிறேன். அவர் கல்வாரியிலிருந்து ஜீவ கயிற்றை எறிந்து, அதை என்னுடைய இருதயத்தின் மேல் கொக்கியிட்டிணைத்தார். 136 சகோதரன் குர்மாண்ட் [Kurmmond] [டிரமாண்ட்] [Drummond] அவர்கள் இன்றிரவு நமக்காக இராபோஜன இரவில் பிரசங்கிக்கப் போகிறார் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கர்த்தரை நேசித்தால், வந்து எங்களோடு இராபோஜனம் எடுத்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இங்கே உங்களோடு இருப்பேன். அது சகோதரன் டோனி ஸேபெல் அவர்களுடைய மருமகன்; சகோதரன் டாம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்; அவருடைய மகன், அருமையான பையன்; உண்மையாகவே நல்ல, திடமான கிறிஸ்தவன், நல்ல குட்டி பிரசங்கியார். ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்னுடைய இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 137 நாம் நம்முடையத் தலைகளை இப்பொழுது வணங்கியிருக்கையில், இசைப்பேழையை தொடர்ந்து வாசிக்கவுள்ளனர். 138 கர்த்தராகிய இயேசுவே, கர்த்தாவே, நாங்கள் மற்றொரு ஆராதனைக்குள் பிரவேசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய இருதயத்தில் பேசினப் பரிசுத்த ஆவியானவருக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, நீர் இதை எங்களுக்காக செய்தீர் என்பதில் நாங்கள் சந்தோஷமாயிருக்கிறோம். உம்முடைய வார்த்தையானது உம்மிடத்திற்கு வெறுமையாய் திரும்பாமல், அது செய்யும்படி தீர்மானிக்கப்பட்டிருந்ததைச் செய்வதாக. உண்மையான எல்லாக் காரியங்களும், நீடித்திருக்கிறக் காரியங்களும் பண்முமின்றி, விலையுமின்றி தேவனிடத்திலிருந்தே வருகின்றன என்பதை அறிந்துக் கொள்ளும்படியாக அது எங்களுடைய எல்லா இருதயங்களுக்குள்ளும் தங்கியிருப்பதாக. நாங்கள் அழிந்துபோகும் காரியங்களுக்காக, ஜீவனுக்கான மரண போராட்டத்தை உண்டாக்குகிற அப்படிப்பட்டதானக் காரியங்களுக்காக ஏன் போராட வேண்டும்? கர்த்தாவே நாங்கள் கிரயமில்லாத, அழிந்துபோகாத காரியங்களுக்காக அதிகமாக போராடுவோமாக. கிரயமானது இலவசமாய் செலுத்தப்பட்டு, “விருப்பமுள்ளவன் எவனோ, அவன் வரக்கடவன்” என்ற ஒரு வரவேற்பு அழைப்பு உள்ளதே. 139 இந்த ஆராதனையின் மற்ற தொடர் நிகழ்வுகளையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, இதை அருளும். இன்றிரவு எங்களோடே சந்தியும். ஞானஸ்நான ஆராதனையை ஆசீர்வதியும். ஒரு மகத்தான பொழிவு உண்டாவதாக. இந்த ஜனங்கள் உம்முடைய நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்களாக. இந்தக் காலையில் தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு தங்களுடையக் கரங்களை உயர்த்தின இந்த ஜனங்கள் ஞானஸ்நான உடைகளை உடுத்திக் கொள்ளும்படியாய் முன்வந்து, அவர்கள் தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும்படியாக ஞானஸ்நான தொட்டிக்குள் செல்ல வருவார்களாக. அவர்கள் புத்தகத்திலிருந்து மன்னிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே, அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுகின்றனர். அதை அருளும் கர்த்தாவே. 140 சகோதரன் குர்மாண்ட் [டிரமாண்ட்] அவர்கள் சிங்காசனத்திலிருந்து புதியதாகச் செய்தியை எங்களுக்குக் கொண்டு வருகையில் இன்றிரவு அவரோடிரும். பரிசுத்த ஆவியினால் அவரை அபிஷேகியும். நாங்கள் இராபோஜனம் எடுக்கையில் எங்களோடிரும். எங்களுடைய இருதயங்கள் சுத்தமாயும், மாசற்றதாயும் இருப்பதாக. எங்களுக்குள்ளாக எந்தக் கறைப்படுத்துதலும் இல்லாமலிருப்பதாக. இயேசுவின் இரத்தம் எங்களை எல்லாப் பாவத்தினின்றும் சுத்திகரிப்பதாக. இதை அருளும். கர்த்தாவே, எங்கள் மத்தியிலிருந்து வியாதியை விலக்கி, எங்களுக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தாரும். நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவினூடாக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். நான் நேசிக்கிறேன்… 141 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது அவரண்டை உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால்… இப்பொழுது உங்களுக்கு அருகில் உள்ள எவருடனாவது கரம் நீட்டி, கரங்களைக் குலுக்குங்கள். முதலில்… (ரஸ்ஸல், நான் அவரை நேசிக்கிறேன். நான் இன்றைக்கே மரிப்பேன் என்றாலும், நான் அவரை நேசிப்பேன்.) சம்பாதி… அது உண்மை, சுற்றி கரம் நீட்டி, கரங்குலுக்குங்கள். …இரட்சிப்பை கல்வாரியிலே. சரி, சகோதரன் நெவில் தன்னுடைய வார்த்தையினால். சரி.